January 29, 2022

செய்தி சேனல்களுக்கு மீண்டும் டி.ஆர்.பி. ரேட்டிங்…!

ந்தியாவில் உள்ள பல்வேறு ஆங்கில செய்தி சேனல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக மும்பை போலீஸ் கண்டறிந்து குற்றச்சாட்டி இருந்ததை அடுத்து நாடு முழுவதும் டிஆர்பி விஷயம் பேசுபொருளானது. அதன் நம்பகத்தனமை மீது கேள்விகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை கணக்கிடும் அமைப்பான பார்க், ரேட்டிங்கை நிறுத்திவைப்பதாக தெரிவித்தது. . பின்னர் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கு மட்டும் டிஆர்பி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் செய்திகளுக்கான டி.வி. நேயர்களின் தரமதிப்பீடு அளவை மீண்டும் தொடங்கப்படுகிறது என்று ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில், BARC தெரிவித்துள்ளது.

நம் நட்டைப் பொறுத்தவரை இந்திய அளவில் செய்தி மற்றும் பொழுதுபோக்கு அம்சத்துக்காக நூற்றுக்கணக்கான தொலைக் காட்சிகள் இயங்கி வருகின்றன. எந்த சேனல்களை மக்கள் விருப்பி பார்க்கிறார்கள், எந்த சேனல்களின் எந்த ஷோவை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை டி.ஆர்.பி ரேட்டிங் பாயிண்ட் என்ற கணக்கீட்டின் மூலம் தெரிந்துகொள்கிறோம். அந்த டி.ஆர்.பி பாயிண்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன. இந்தநிலையில், செய்தி தொலைக்காட்சிகளில் டி.ஆர்.பி புள்ளிகளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதனையடுத்து, செய்தி தொலைக்காட்சிகளில் ரேட்டிங் பாயிண்ட் கணக்கிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டி.ஆர்.பி பாயிண்ட்டை மீண்டும் கணக்கிடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக BARC வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டி.ஆர்.பி கமிட்டியின் அறிக்கை மற்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை 28-4-2020-ம் ஆண்டு செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் குழு (BARC) நிறுவனம் தன்னுடைய ஆய்வுமுறை, விதிமுறைகள், ஆய்வு செய்யும் வழிமுறை, மேற்பார்வையிடம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவருவதற்கான பணிகளைத் தொடங்கியது. மறுசீரமைக்கப்பட்ட பார்க் வாரியம் மற்றும் தொழில்நுட்பக் குழு சுதந்திர உறுப்பினர்கள் ஆய்வு செய்வதை அனுமதிக்கிறது. நிலையான மேற்பார்வையிடும் குழுவும் அமைக்கப்படுகிறது. தரவுகளை கையாளும் வழிமுறைகள் கடினப்படுத்தப்பட்டுள்ளது. BARC மேற்கொண்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, புதிய முன்மொழிவுகளை விளக்குவதற்கு தொடர்புடைய தொகுதிகளை அணுகி, புதிய நெறிமுறைகளின்படி வெளியீட்டை உண்மையில் தொடங்கத் தயாராக இருப்பதாக BARC சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய வழிமுறைகளின்படி டி.ஆர்.பி புள்ளிகளை கணக்கிடும் முறைக்கு BARC தயாராக உள்ளது. அதனை ஆய்வு செய்யும் குழுவுக்கு புதிய வழிமுறைகளை செய்து காண்பிக்கவும் BARC தயாராக உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள விவகாரங்களைக் கருத்திக் கொண்ட மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் செய்திகளுக்கான டி.ஆர்.பி ரேட்டிங் பாயிண்ட்களை உடனே வெளியிட வலியுறுத்தியுள்ளது. மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கான தரவுகளை மாதங்களின் அடிப்படையில் வெளியிடம் வலியுறுத்தியுள்ளது. திருத்தப்பட்ட முறையின்படி, செய்திகள் மற்றும் முக்கிய வகைகளின் அறிக்கையானது ‘நான்கு வார செயல்பாட்டின் சராசரி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

மேலும், தொலைதொடர்புத்துறை அமைச்சகம் பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியின் கீழ் செயல்படும் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டி.ஆர்.பி ரேட்டிங் பாயிண்ட் தொடர்பாக தங்களது அறிக்கையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.