October 21, 2021

சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளுக்கான பரிந்துரை பட்டியல் – சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு!

சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் பதவிக்கான பரிந்துரை பட்டியலை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. உத்தேச நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலையும் சுப்ரீம் கோர்ட் திருப்பி அனுப்பியது. முன்னதாக இந்த பரிந்துரை பட்டியலை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் தத்து, லோதா அடங்கிய குழு பரிசீலனை செய்தது. மேலும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 12 பேர் அடங்கிய பட்டியலை இந்த குழு திருப்பி அனுப்பியுள்ளது.
order in court
சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 12 பேர் அடங்கிய பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் செயலருக்கு அனுப்பப்பட்டது.இந்தப் பெயர் பட்டியலை எதிர்த்து மூத்த வழக்குரைஞரும், சென்னை ஹைகோர்ட் வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.காந்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 30 ஆண்டுகளாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி பதவிக்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமே திரும்பத் திரும்ப நியமிக்கப்படுகின்றனர்.சென்னை ஹைகோர்ட்டுக்கான புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக 12 பேர் பெயர்கள் அடங்கிய பட்டியல் நியமனக் குழுவால் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தயார் செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் சிலர் நீதிமன்றத்தில் பயிற்சியே செய்வதில்லை. அவர்களை நீதிபதியாக நியமிப்பதற்கு போதிய தகுதி இல்லை.எனவே, சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் செயலருக்கு அனுப்பப்பட்ட பெயர் பட்டியலை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் உத்தேச நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலையும் சுப்ரீம் கோர்ட் திருப்பி அனுப்பியது. முன்னதாக இந்த பரிந்துரை பட்டியலை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் தத்து, லோதா அடங்கிய குழு பரிசீலனை செய்தது. மேலும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 12 பேர் அடங்கிய பட்டியலை இந்த குழு திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்க்து.