September 24, 2021

சென்னை வானிலையும், பனி மூட்டமும்! – கொஞ்சம் டீடெய்ல்!

இப்போது தினமும் நாம் கேட்கப்பெறுவது பனி மூட்டத்தால் விமானம் தாமதம். இது டெல்லி போன்ற இடங்களுக்கு பெருசா ஒண்ணும் இல்லையானாலும் சென்னை போன்ற விமானத்தளம் இத்தகைய அறிவிப்பை வெளியிடும் போது இது என்ன என்று பலருக்கு குழப்பம். இதன் உண்மை நிலையை பற்றி உங்களுக்கு…!.
ravi jan 7
பனிமூட்டம் / அதிக மழை / ஸ்னோ ஃபால் என்ற பல விஷயங்களால் பார்வை அளவு குறைப்பாடு என்பது விமானங்கள் மட்டுமல்ல – ரோட்டில் செல்லும் கார் – டெடிக்கேட்டட் தன்டவாளத்தில் செல்லும் ரயில் முதற்கொண்டு அனைத்து பாதிக்கபடுவது தவிர்க்க இயலாது. இதனால் மிகவும் அதிகமாக பாதிக்கபடுவது விமானப்பயணங்கள் ஏன் எனில் விமான பயணங்களில் மட்டும் தான் லேன்டிங் / டேக் ஆஃப் என இருவகையான சோதனை ஒவ்வொரு பயணத்திலும் உண்டு.

தரை வழி பயணம் அவ்வளவு பிரச்சினை இல்லை ஏன் எனில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு தேவை வெறும் 100 மீட்டர் கிளியரன்ஸ் தான் – ரயில் சிக்னல் பிரச்சினைக்காக தேவை 300 – 500 மீட்டர் தான். ஆனால் விமான ஒட்டிகளுக்கு என்னதான் ஆட்டோ பைலட் இருந்தாலும் அவர்களுக்கு 500 மீட்டர் முதல் 1 கிலோமீட்டர் வரை கிளயரன்ஸ் இருப்பது அவசியம். அந்த வகையில் ஒவ்வொரு விமானிக்கும் தேவை கேட் 1 / 2 / 3 பி என்னும் ஒரு வகை பயிற்ச்சி – அது போக இந்த பயிற்ச்சிக்கு பின் அந்த அந்த விமான தளத்தில் இந்த உபகரணும் இருந்தால் வெறும் 15 மீட்டர் கிளியரன்ஸ் இருந்தாலே போதுமானது. இன்றைக்கு இந்தியாவில் CAT III B உள்ள ஒரே விமான நிலையம் டெல்லி மட்டுமே. கல்கத்தா ஏர்போர்ட் 2012ல இன்ஸ்டால் செய்ய வேண்டியது ஆனா என்னாச்சுனு தெரியலை.

இப்போது தமிழக / சென்னை சினாரியாவுக்கு வருவோம்………….கடந்த மூன்று மாதத்தில் மொத்தமே 21 நாட்கள் தான் முழுதாய் சூரியன் உதித்த நாட்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதிகம் உஷ்ணமுள்ள வடகத்தி ஏரியாக்களான நெல்லை / தூத்துக்குடி கூட இந்த ஸன் பிளாக்கவுட் அதிகம் இருந்தது தெரியுமா – 43 – 47 செ மீட்டர் அதிகபட்ச மழையை தாண்டி இந்த வருடம் மழை பெய்தது எத்தனை பேருக்கு தெரியும் – முக்கடல் சூழ்ந்த தமிழக / ஆந்திர / கேர்ளாவில் அதிக பருவ மாற்றங்கள் ஏற்படுகிறது / இன்னும் அதிகம் எதிர்ப்பார்க்கலாம். மழை அதிகபட்ச அளவை விட இன்னும் அதிகம் பெய்யும் – குளிர்காலம் என்ற ஒன்றை இனிமேல் வருட கடைசியில் கிடைக்க பெறுவீர்கள் இதெல்லாம் குளோபல் வெதர் சேஞ்ச்சின் படி இன்னும் வருடங்களில் காண முடியும்.

இதை முன் கூட்டியே பல வானிலை மையங்கள் உணர்த்தியிருந்தாலும் இந்த CAT III B அல்லது மிக குறைவான கேட் 1 / கேட் 2 கூட தேவையில்லை என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி மறுத்து இந்த வகை பருவ மாற்றத்த்க்கு தயாராக இல்லையென்பதே – ஐ தின்க் இவங்க சென்னை 50வது கூரை உடைப்பு விழாவுக்கு பிஸியா இருக்காங்கன்னு – அதனால டெல்லி பனி அதனால சென்னையில் லேட்டுனு அல்வா கொடுத்தா கேட்காதீங்க –

 

இந்த உண்மையை படிச்சு இன்னும் விமான தளங்கள் மற்றும் அதன் உபகரணங்களை தெரிந்து கொள்ளுங்களேன்.http://www.aai.aero/public_notices/%28VIDP17-40%29-DELHI2.pdf

 

True Analysis of Chennai Fog Delays and Reasons……..