October 19, 2021

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை

“சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் கட்டும் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கி பணிகளை முடித்தது திமுக ஆட்சி தான் அதன் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகளே இருந்த நிலையில், 2011-ம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால், திறப்பு விழா நடைபெறவில்லை.”என்று கருணாநிதி கூறியுள்ளார்.
13 - Karunanidhi
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக கட்டிட திறப்பு விழா விளம்பரத்தைப் பார்க்கும் அனைவருக்கும் குறிப்பாக காவல்துறை நண்பர்களுக்கு அந்தக் கட்டிடம் பற்றிய அனைத்து விவரங்களும் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தே தீரும். 23&3&2007ல் திமுக ஆட்சி நிதிநிலை அறிக்கையில் 21 கோடி மதிப்பீட்டில் காவல்துறை ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு இந்த அரசு அனுமதி அளித்துள்ளது என்று அப்போதே கூறப்பட்டிருக்கிறது.இந்த ஒரு கட்டிடம் மாத்திரமல்ல காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் 1.61 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய இணைப்புக் கட்டடம் ஸீ24 கோடியே 50 லட்சம் செலவில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு காவல் துறையிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டது.

அது போலவேதான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குப் புதிய கட்டிடம் வேப்பேரி, போக்குவரத்துக் காவல் அலுவலக வளாகத்தில் 25 கோடியே 46 லட்சம் செலவில் கட்டுவத ற்கு அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகள் இருந்த நிலையில், 2011ம் ஆண்டில் திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால், திறப்பு விழா நடைபெறவில்லை. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், அதன் திறப்பு விழாவை இத்தனை மாதங்களாக நடத்தாமல் இருந்தார்கள்.

நான் சென்ற மாதம் 6&9&2013ல் முத்தியால்பேட்டை காவல் நிலையக் கட்டிடம், செம் பியம் காவல் நிலையக் கட்டிடம் போன்ற பல காவல் நிலையக் கட்டிடங்கள் பல மாதங்களாக முதல் வரின் தேதிக்காகத் திறக்கப்படாமல் இருக்கின்றன என்று எழுதிய பிறகு, 17&9&2013ல் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்த பல காவல் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்ததாகச் செய்தி வந்தது.

திமுக ஆட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சியிலாவது காவலர்களின் நலன்களுக்காக காவல் துறை ஆணை யம் அமைக்கப்பட்டது உண்டா? கிடையாது. காவலர்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் 50 சதவீத விலையில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் முறை 1&10&2008 முதல் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ 60 ஆயிரம் காவலர் குடும்பங்கள் இப்போதும் பயனடைகின்றன. 1973ம் ஆண்டு முதன் முதலாக மகளிரை காவல் துறையில் சேர்ப்பதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்ததும் திமுக ஆட்சியில்தான்.

காவல் துறையில் மகளிர் அப்போது சேர்க்கப்பட்ட காரணத்தால், அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா மகளிர் காவல் நிலையங்களை அவருடைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாகத் தொடங்கினார். நான் அதை மறைக்க விரும்பவில்லை.எதிர்க்கட்சி செய்தது என்றால், அதை அப்படியே மூடிமறைக்க நான் என்றைக்கும் விரும்ப மாட்டேன். காவல் துறையின ருக்கு நிதியளிப்பு, பதவி உயர்வு என்று தற்போது பக்கம் பக்கமாகச் செய்தி வருகிறதே நான் இதற்கு முன்பு நடைபெற்ற ஒரேயொரு சம்பவத்தை மட்டும் நினைவூட்டுகிறேன்.

12&9&2003ல் முதல்வர் ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்தார். அதில், ஈரோடு மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றிய மயில்சாமி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையொட்டி அவருடைய குடும்பத்திற்கு ஸீ1 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்புப் பணி என்று கூறப்பட்ட போதிலும், அது முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது தான் சரி. அந்த ஸீ1 லட்சம் நிதி எப்போது வழங்கப்பட்டது தெரியுமா? முதல்வர் அறிவிப்புக்கு 15 மாதங்களுக்குப் பிறகு 22&12&2004ல் இதற்கான கோப்பு முதல்வரின் அலுவலகத்திற்கு உத்தரவிற்காக அனுப்பப் படுகிறது.

கோப்பு கையெழுத்தானதா? 22&12&2004ல் அனுப்பப்பட்ட கோப்பு முதல்வர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் திரும்ப வரவில்லை என்றும் இறந்து போன மயில்சாமியின் தாயார் அந்தத் தொகையைக் கேட்டு வலியுறுத்துவதாகவும், கோப்பினைத் திரும்ப அனுப்பக் கேட்டு, ஒரு குறிப்பு முதல்வர் அலுவலகத்திற்கு 14&9& 2005ல் அனுப்பப்படுகிறது.அப்போதும் கோப்பு கையெழுத்திடப்பட்டதா? இல்லை.

24&1&2006ல் மீண்டும் உள்துறையில் இருந்து ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, ஸீ1 லட்சம் பாதிக்கப் பட்டவர்களுடைய குடும்பத்திற்கு வழங்க, ஒப்புதல் கோரி முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட் டது. அந்தக் கோப்பில் நிதித்துறைச் செயலாளர் 27&1&2006ல் அன்று கையெழுத்திட்டு, முதல்வர் அலு வலகத்திற்கு கோப்பு அனுப்பிய போதிலும் அதில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டு ஆட்சியில் இருந்த வரை திரும்ப அனுப்பவே இல்லை. 2006ம் ஆண்டு மே பொதுத் தேர்தல் முடிந்த பிறகு அந்தக் கோப்பு முதல்வராக இருந்த எனக்கு அனுப்பப்பட்டு 11&6&2006ல் நான் ஒப்புதல் கையெழுத்திட்டு அனுப்பினேன்.

இந்த விவரத்தை நான் 30&8&2006ல் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேரவையில் எடுத்துக் குறிப் பிட்டு, அது நடவடிக்கைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. இன்றுகூட ஒரு செய்தி வந்துள்ளது. 2002ம் ஆண்டு போலீஸ் பக்ருதீன் குருவான இமாம் அலியை சுட்டுப் பிடித்த காவலர்களில் சிலருக்கு மட்டும் அப்போது சிறப்புப் பரிசும், பதவி உயர்வும் அளித்த ஜெயலலிதா 12 போலீசா ருக்கு பதவி உயர்வு தரவில்லையாம்.

இந்தச் செய்திகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு தான், காவலர்களுக்கு ஸீ5 லட்சம் பரிசு, பதவி உயர்வு என்று சிலருக்கு அறிவித்து ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் அதைக்கூட முறையாக அந்தச் சம்பவத்திற்காகப் பாடுபட்ட அனைவருக் கும் வழங்காமல், ஒரு சிலருக்கு மட்டும் வழங்கி, மற்றவர்களின் சாபத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பெறுவதோ லாபம் பலர் தருவதோ சாபம்.”என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.