September 17, 2021

சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிசம்பர் 12 டூ 19 -ம் தேதி வரை நடக்கிறது

இண்டோ சினி அப்ரிசேஷன் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2003ம் ஆண்டு துவங்கிய இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசு இந்த விழாவுக்கு தொடர்ந்து நிதி உதவியும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக அமிதாப்பச்சன் கலந்து கொண்டார்.
nov 6 - cine CIFF.
இந்த ஆண்டு 11வது சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 12ந் தேதி தொடங்கி 19ந் தேதிவரை 8 நாட்கள் நடக்கிறது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 படங்களை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். சத்யம், உட்லண்ட்ஸ், தேவி, எஸ்கேப், போன்ற மால் தியேட்டர்களில் ரெட்கார்பெட் ஷோவும் நடத்த இருக்கிறார்கள். இந்த ஆண்டு படவிழாவில் திரையிட தமிழ் படங்களை கேட்டிருக்கிறார்கள். அவற்றுக்கும் விருது வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான விண்ணப்பங்களை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், எண் 4, 2-வது மாடி, இ-பிளாக், ஜெமினி பார்சன் குடியிருப்பு, சென்னை – 600 006 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 044-28212652, 65163866, 9840151956 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

இப்போட்டியில் பங்கேற்க 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி முதல் 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி வரை தயாரிக்கப்பட்டு சென்சார் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் மட்டுமே தகுதி பெற்றவை.

மேலும், விண்ணப்பத்தோடு போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரைப்படங்கள் ஆங்கில சப்-டைட்டில் செய்யப்பட்ட 2 டிவிடிக்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவ.10-ந் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.