September 18, 2021

சென்னை உள்பட 6 நகரங்களில் பெண்களுக்கான மகிளா வங்கி திறப்பு!

முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் மகிளா வங்கி கிளைகள் திறக்கப்படுகின்றன. இந்த வகையில் சென்னையில் அண்ணா சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில் தரை தளத்தில் பெண்கள் வங்கி இன்று முதல் செயல்படுகிறது. 1162 சதுர அடியில் செயல்படும் இந்த வங்கியில் பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படும்.சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். டெல்லியை தலைமை அலுவலகமாக கொண்டு இந்த பெண்கள் வங்கி செயல்படுகிறது. பெண்கள் வங்கியில் ஆண்களும் கணக்கு தொடங்கலாம் என்பது அடிசினல் தகவல்.
nov 19 - women bank
ஏற்கனவே பல பொதுத் துறை வங்கிகள் பெண்களால் மட்டுமே இயங்கும் கிளைகளை தொடங்கி நடத்தி வருகின்றன.இந்நிலையில் வங்கியின் தலைமை முதல் கீழ் நிலையில் உள்ள ஊழியர் வரையில் பெண்களால் மட்டுமே இயக்கப்பட உள்ள பாரதிய மகிளா வங்கியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன் செயல்படும் இவ்வங்கி முதல் ஆண்டில் நாடு முழுவதும் 39 கிளைகளை தொடங்க திட்டமிட்டு அடுத்த 7 ஆண்டுகளில் இவற்றை 778 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் முதல்கட்டமாக 127 ஏடிஎம் மையங்களை அமைக்கவும் இந்த வங்கி தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது .அத்துடன்வங்கியின் செயல்பாடுகளை நாட்டின் எந்த கிளையில் இருந்தும் செயல்படுத்திக் கொள்ளும் வகையில் கோர்பாங்கிங் முறையும் இதில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த வங்கிக்கு தலைமையகம், டில்லியில் இருக்கும். டில்லியில் தேர்தல் நடப்பதால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதனால், மும்பையில் துவக்கப்படுகிறது. மும்பையைத் தொடர்ந்து, கோல்கட்டா, சென்னை, ஆமதாபாத், கவுகாத்தி உட்பட ஏழு இடங்களின், மகிளா வங்கியின் கிளைகள் துவக்கப்படும்.

இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உஷா அனந்தசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குனராக இருந்தார்.

All women’s bank to open today:
*************************************************