October 22, 2021

சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுள்-ன் முக்கிய தலைமை பொறுப்பு!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவற்றை ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சென்னை தமிழன் அந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக்., படித்தவர் என்பதும் அமெரிக்காவின், “ஸ்டேன்போர்டு’ பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர், “வார்ட்டன் பிசினஸ்’ கல்லூரியில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்று கடந்த, 2004ல், கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர், “கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசர்’ பிரிவின் தலைவராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
google pitchai
சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். சென்னையில் பிறந்த இவர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

தமிழ்நாட்டில் பிறந்த சென்னையில் சுற்றித் திரிந்த சுந்தர் புதியனவற்றை உருவாக்குவதில் திறமை கொண்டவர். அதற்கு உதாரணம்தான் கூகுள் குரோம். 2008ம் ஆண்டில் மக்கள் மேலும் ஒரு பிரௌசர் தேவைதானா என்று நினைத்தனர்.அவரின் உழைப்பில், திறமையில் உருவான குரோம் பிரௌசரைதான் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.அதன் வேகம், எளிமை, பாதுகாப்பு தன்மை போன்ற காரணங்களாலேயே அது பலரை கவர்ந்துள்ளது.மேலும் தனது அயராத உழைப்பின் மூலம் குரோம், கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றையும் நிர்வகித்து வரும் நிலையில் முக்கிய முடிவு ஒன்றை கூகுள் சி.இ.ஓ லார்ரி பேஜ் எடுத்துள்ளார். அதன்படி கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளையும் பிச்சையின் பொறுப்பிலேயே கொடுத்துள்ளார் லார்ரி பேஜ். சுந்தர் பிச்சையின் பதவியில் எந்த மாற்றமும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கூடுதலான பொறுப்புகள், பிச்சையின் முக்கியத்துவத்தை கூகுள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. புதிதாக தரப்பட்டுள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனிமேல் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள்.