October 16, 2021

சென்னையில் பாஸ்போர்ட் மேளா; நவம்பர் 1-ந் தேதி நடக்கிறது

“அண்மை காலமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பம் நாள் ஒன்றுக்கு 110-ல் இருந்து 180 ஆக உயர்ந்துள்ளது. எனவே, சென்னையில் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் வருகிற நவம்பர் 1-ந் தேதி ‘பாஸ்போர்ட் மேளா’ நடத்தப்படவுள்ளது. “என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Passport apply
நேற்று வெளியான அக்குறிப்பில்,”பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்று சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போட் கிளை அலுவலகம் செயல்படுகின்றன. இந்த 3 அலுவலகத்திலும் நாள் ஒன்றுக்கு பாஸ்போட் கேட்டு 1,850 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது, விண்ணப்பங்கள் அதிக அளவில் வருவதால், நாள் ஒன்றுக்கு 2,080 விண்ணப்பங்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் அண்மை காலமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பம் நாள் ஒன்றுக்கு 110-ல் இருந்து 180 ஆக உயர்ந்துள்ளது. எனவே, சென்னையில் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் வருகிற நவம்பர் 1-ந் தேதி ‘பாஸ்போர்ட் மேளா’ நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ் மற்றும் அதனுடைய 2 நகல்களையும் கொண்டு வரவேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.