September 18, 2021

சென்னையில் பரவும் புதிய கண் நோய்!

’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்வது மாதிரி, நம் உடலில் ஒரு பிரச்னை அல்லது நோய் வந்தால் நம் கண்களே காட்டி கொடுத்து விடும். அதாவது கண்கள் உப்பியிருந்தால்… சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை கண் இமைகளில் வலி ஏற்பட்டால் அதிகப்படியான வேலை காரணமாகவோ அல்லது உடலில் மக்னீசியம் குறைவதால் உடல் சோர்ந்தோ இவ்வலி ஏற்படுகிறது. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம். என்பதும் அதிகமாக வேலை செய்துகொண்டே இருப்பதால் இந்த நெருக்கடியால் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென்று அதிகப்படியான வெளிச்சமும், புள்ளிகளும் தெரிகின்றனவாம்.
red rye
இதனிடையே தற்போது பருவநிலை மாற்றங்களால் சென்னையில் புதிய வகை கண் நோய் பரவுகிறது. பாக்டீரியாவால் உண்டாகும் கண்நோய், வைரஸ் கிருமிகளால் உண்டாகும் கண்நோய், பூஞ்சைகளால் உண்டாகும் கண் நோய், ஒவ்வாமையால் உண்டாகும் கண்நோய் போன்றவை வழக்கமாக பரவக்கூடியது.

ஆனால் இப்போது வைரஸ் பாதிப்பால் கண் நோய் பரவி வருகிறது. சென்னையை பொறுத்தவரை காற்றில் ஏற்படும் மாசு, சுற்றுசூழல் மாசு ஆகியவற்றால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.இப்போது பரவும் வைரசின் பாதிப்பால் ஏற்படும் நோய் தொற்று விழி வெண் படலத்தை தாக்குகிறது. இதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் நமீதா புவனேஸ்வரி,”கண் நோய் பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது. எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கு தினமும் 5 முதல் 10 பேர் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மே மாதத்தில் தொடங்கி ஜூன், ஜூலை மாதம் வரை இந்த நோயின் பாதிப்பு இருக்கும்.
சிவந்த கண்கள், கண் உறுத்தல், கண் இமையில் வீக்கம், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நீர்வடிதல் போன்றவை கண் நோய்க்கான அறிகுறிகளாகும். நோய் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே கண் மருத்துவர்களை நாடவேண்டும்.

பொதுவாக ‘அடினோ’ என்ற வகை வைரசின் பாதிப்பால் கண் நோய் ஏற்படும். ஆனால் கடந்த சில மாதங்களில் வழக்கத்தை விட அதிகமானோருக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் இந்த கண் நோய்க்கு ‘என்ட்ரோ’ எனப்படும் புதிய வகை வைரஸ் காரணம் என்று கண்டறியப்பட்டது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.”என்று தெரிவித்தார்.

மேலும் கண் நோய்க்கு ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கும் பொழுது, அவர்கள் உடனடி தீர்வுக்காக ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.இது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்