September 20, 2021

சென்னையில் காற்றாலை மின் உற்பத்தியை முன்கூட்டியே கணிக்கும் மையம்!

காற்றாலை மின்சார தேசிய நிறுவனம் சார்பில், சென்னையில், காற்றாலை மின்சக்தியை முன்கூட்டியே அறிவிக்கும் சேவை மையம் இன்று (புதன்கிழமை) தொடங்கப்படுகிறது. தேசிய காற்றாலை மின்சக்தி நிறுவனமும், ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு புகழ் பெற்ற நிறுவனமும் சேர்ந்து இந்த சேவை மையத்தை தொடங்குகிறது.
tn mar 13
இந்த சேவை மையம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கும்? என்று முன்கூட்டியே அறிவித்து விடும். அதன் மூலம் காற்றாலைகளில் எந்தெந்த பகுதிகளில் இருந்து அடுத்த சில நாட்களில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டு அதனை மின்தொடர் பாதைகள் வழியாக கொண்டு வர ஏதுவாக இருக்கும்.

தற்போது எப்படி வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டி நடப்பதை கணிக்கிறதோ? அதேபோல் காற்றாலை மூலம் அடுத்த நாளில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதையும் இந்த மையம் கணித்து சொல்லும்.

தமிழகத்தில் தற்போது 12 ஆயிரம் காற்றாலைகள் இருக்கிறது. முழுமையான காற்று வீசும் காலங்களில் 7 ஆயிரத்து 480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு கொள்திறன் உள்ளது. சென்னையில் இன்று (புதன்கிழமை) பகல் 3.30 மணிக்கு மத்திய அரசின் காற்றாலை துறை இணை செயலாளர் வர்ஷா ஜோஷி இந்த மையத்தை தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இந்திய காற்றாலை மின் உற்பத்தி சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.