September 27, 2021

சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்!

உலக செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதுகிறார்கள்.12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்து போட்டியை ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
nov 7 - chess
12 சுற்றுகள் முடிவில் இருவரும் சம நிலை வகித்தால், சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் டைபிரேக்கர் போட்டி 28–ந் தேதி நடைபெறும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.14 கோடியாகும்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் உலக செஸ் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அத்துடன் இருவரும் எந்தநிற காயுடன் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா குலுக்கல் மூலம் முடிவு செய்கிறார்.

முன்னதாக் ஆனந்த், கார்ல்சென் ஆகியோரை அவரவர் நாட்டு கொடி அணிவகுப்புடன் சர்வதேச வீரர்களால் விழா மேடைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. வீணை காயத்ரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கார்ல்செனின் சொந்த நாடான நார்வேயின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் இடம் பெறும்.