September 26, 2021

செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி பிரதமர் மோடி சுதந்திர தின உரை:

நாட்டின் 69 வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி செங்கோட்டைக்கு வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
pm aug 15a
அவரது உரையின் போது, “ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திரத்தின் விடியல். 125 கோடி மக்களுக்கான கனவு மற்றும் நம்பிக்கைக்கான நேரம் இது. வீரம் மிக்க சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.. இளைஞர்கள் பெண்கள் என தலைநமிர வைத்த தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் . நமது நோக்கம் நல்ல ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். நாட்டின் ஒற்றுமை குலைந்தால் மக்களின் கனவும் சீரழிந்து விடும். இந்தியாவின் சுதந்திரத்தை தியாகம் செய்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்தியாவின் வலிமையும், ஒற்றுமையும், பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஒராண்டுகளில் நாடு முழுவதும் பள்ளி களில் 4.25 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியான காப்பீடு ஓய்வூதிய திட்டங் களை நிறைவேற்றியுள்ளோம். சிறுவர்களே தூய்மை இந்தியா திட்டத்தின் சிறந்த தூதுவர்களாக இருந்தனர். தொழிலாளர் களின் கவுரவத்தை காப்பது நமது நாட்டின் கடமை. அரசின் அனைத்து திட்டங்களும் ஏழைகளுக்கான திட்டமாகவே இருக்கும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் 17 கோடி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க மேல் மட்டத்தில் இருந்து நடவடிக்கைகள் தேவை. சாதியவாதம், மதவாதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடாது. விமர்சனங்களை எல்.பி.ஜி மானியம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வீணான 15 ஆயிரம் கோடி தடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் பேர் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். மானியத்தை விட்டுக்கொடுக்க இயன்றவர்கள் முன் வர வேண்டும்.
CMa0JD_VAAELWYf
நமது இலக்கை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. பொருளதரம் வலுவாக இருந்தால்தால் தான் வளர்ச்சி மூலம் ஏழைகளை மேம்படுத்த முடியும். ஊழலை ஒழிக்க உயர் மட்டத்தில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பால் தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமாகியுள்ளது. அனைத்து அரசுகளும் திட்டங்களை தீட்டினாலும் நடைமுறைப்படுத்துகிறதா என்பது கேள்விதான். ஏழைகளுக்கு திறக்காத வங்கி கணக்குகளை திறந்து விடுவதே எங்கள் நோக்கம். நமது எண்ணம் செயல் அனைத்திலும் ஏழ்மையை ஒழிப்பதில் செலவிட வேண்டும்.

இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த ஓராண்டில் ஒரு ஒரு ஊழல் கூட நடை பெறவில்லை. ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச உதவியை நாடினேன். கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுவது, இது 2–வது முறை ஆகும்.முன்னதாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்திலும் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி நகரம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், துணை ராணுவப்படையினர் மற்றும் டெல்லி போலீசார் 12 ஆயிரம் பேர் ஆவர். அவர்கள், விழா நடைபெறும் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.