October 18, 2021

சீனிவாசன் ரொம்ப நல்லவரு! மேட்ச் பிக்சிங் குறித்து முத்கல் குழு அறிக்கை!

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நியமித்த நீதிபதி முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையின் சில பகுதிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சீனிவாசன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சீனிவாசன், ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதன் நிர்வாக குழுவினர் அனைவருக்கும் மேட்ச் பிக்சிங் நடைபெறுவது தெரிந்திருந்தது எனவும், அதை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முத்கல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
criket srinivasan-
ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க பகுதி அறிக்கையை கோர்ட் இன்று வெளியிட்டது.

அதில் பி.சி.சி.ஐ தலைவராக உள்ள சீனிவாசன் மேட்ச் பிக்சில் ஈடுபடவில்லை என முத்கல் குழு கூறியுள்ளது. ஆனால் அதே சமயம் சீனிவாசன், ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதன் நிர்வாக குழுவினர் அனைவருக்கும் மேட்ச் பிக்சிங் நடைபெறுவது தெரிந்திருந்தது எனவும், அதை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முத்கல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மெய்யப்பனின் சூதாட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரியே அவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

முத்கல் குழு அறிக்கை வெளியான பின் கருத்து தெரிவித்த சீனிவாசன், இதன் மூலம் தான் நிம்மதி அடைந்திருப்பதாகவும், அதே சமயம் அறிக்கையின் முழு விவரங்களை பார்த்த பின் தன்னால் கருத்து கூற முடியும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து வரும் 20-ந் தேதி பி.சி.சி.ஐ.-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேட்ச் பிக்சிங்கில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை என்று தெரியவந்துள்ளதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.