September 25, 2021

சீனா காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி

சீனாவில் கடந்த வார இறுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பெய்ஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.இதையடுத்து 5 குற்றவாளிகளை பெய்ஜிங் போலீசார் கைது செய்தனர்.அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள செரிக்புயா நகர போலிஸ் நிலையத்தை பயங்கரவாதிகள் தாக்கினர். அபோது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 போலீஸார் வெட்டி கொல்லப்பட்டனர்.மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIBYA-POLITICS-UNREST
சீனாவில் 1989-ம் ஆண்டு ஏற்பட்ட ஜனநாயக புரட்சியை ராணுவம் அடக்கி ஒடுக்கியது. இந்த புரட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் சீன தலைநகர் பீஜிங்கில் போராட்டம் நடத்திய இடம் டியனன்மென் சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் சீனாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்து மறைந்த மாவோ ஜெடாங்கின் சமாதியும் அவரது பிரமாண்ட சித்திரமும் வரையப்பட்டுள்ள இந்த இடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.

எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ள டியனன்மென் சதுக்கம் அருகே கடந்த 4ம் தேதி படுவேகமாக வந்த ஒரு மர்ம கார் மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. பலரை இடித்து தள்ளிய அந்த கார் தடுப்பு சுவற்றில் மோதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா வாசி ஒருவரும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.படுகாயமடைந்த 38 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் எதிர்பாராத விபத்தா? அல்லது, தீவிரவாதிகளின் சதி வேலையா? என போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் டியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்து அல்ல.. தீவிரவாத தாக்குதல்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பீஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

டியனன்மென் சதுக்கத்தில் நடந்தது தற்கொலை படையினரின் கார் குண்டு தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பீஜிங் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் கடந்த 1-ம் தேதியில் இருந்து தங்கியுள்ள வெளிநாட்டினரின் விபரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது தீப்பிடித்து எரிந்து நாசமாகிய காரின் நம்பர் பிளேட் சிங்ஜியாங் மாகாணத்தின் பதிவு எண்ணை கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் சீன படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

அதிகமாக உய்ருர் முஸ்லிம்கள் வாழும் இப்பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை பீஜிங் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள செரிக்புயா நகர போலீஸ் நிலையத்தை கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை ஏந்தி வந்த தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர்.
போலீஸ் நிலையத்தை சூறையாடிய தீவிரவாதிகள் 2 போலீசாரை கோடாரிகளால் வெட்டி சாய்த்தனர்.இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

China police station attack leaves 11 dead
****************************************************************
Nine axe-wielding assailants have been shot dead during an attack on a police station in China’s volatile western Xinjiang province, state media say.