September 24, 2021

சி.பி.ஐ. சட்டப்பூர்வமானதல்ல என்ற கவுகாத்தி ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

சி.பி.ஐ சட்டப்பூர்வமானது அல்ல என்று அண்மையில் கவுகாத்தி ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கவுகாத்தி ஹைகோர்ட்டின் உத்தரவிற்கு தடை விதித்தது.
nov 9 - CBI-Court.
நவேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த சி.பி.ஐ.க்கு எதிரான வழக்கு கவுகாத்தி ஹைகோர்ட்டில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில் சி.பி.ஐ. அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்று கவுகாத்தி கோர்ட்டு நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பு காரணமாக சி.பி.ஐ. நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கவுகாத்தி கோர்ட்டு உத்தரவுக்கு தடை பெற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று அப்பீல் செய்தது. அந்த அப்பீல் மனுவில், அவசரம் கருதி மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நவேந்திர குமார் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. அமைப்பு அரசு சட்டப்பூர்வமானது அல்லது என்று கவுகாத்தி கோர்ட்டு விதித்த தீர்ப்புக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் மத்திய அரசின் மனுக்கு எதிரக கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நவேந்திர குமார் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. உள்துறை மற்றும் சி.பி.ஐ.யிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

How did Gauhati HC declare CBI invalid? All you need to know

*******************************************************************
An unprecedented judgement by the Gauhati High Court has sent the Union government in to a tizzy. In its verdict on Thursday, the bench quashed the resolution based on which the CBI was constituted and ruled that the body cannot be treated as a ‘police force’.