September 29, 2021

சிவன் பெயரால் சூதாட்டம்! – ஜெர்மனியில் சர்ச்சை!

பல்வேறு நாடுகள் அவ்வப்போது நம் இந்து கடவுள் படங்களை அவமதிப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.பீர் பாட்டில்களின் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனம்,உள்ளாடைகளின் அம்மன் படம் போட்ட கிரீஸ் நாடு என்று மட்டுமில்லாமல் நம் நாட்டிலேயே கிரிக்கெட் வீரர்களை விஷ்ணு படத்தை போட்டு விளம்பரம் செய்ததெல்லாம் சர்ச்சைக்குள்ளான நிலையில் ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டதைக் கண்டித்து பலத்த எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும் யூதர்களும் புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
shiva gambling
கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளர் படங்களை சூதாட்டத்தில் பயன்படுத்தும் வழக்கத்தை, சூதாட்ட நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும் என்று கலிபோர்னியா மற்றும் நவேதாவில் உள்ள யூத மத குரு எலிசா டபிள்யூ.பேயர் வற்புறுத்தியுள்ளார். சிவபெருமான் போன்ற மத அடையாளங்களை மதிக்க வேண்டும்; பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு சூதாட்டங்களில் பயன்படுத்துவது கூடாது என்றார்.

மேலும் பிரபஞ்ச இந்து அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட், பிற மதத்தலைவர்களின் இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.சிவபெருமான் படத்தை சூதாட்டத்தில் பயன்படுத்திய நிறுவனம் இந்த செயலுக்காக உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த சூதாட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு இந்து மத அடையாளங்களைக் கொச்சை படுத்துவது, இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்