September 25, 2021

சிறுவர்களின் பற்சிதைவை தடுக்கும் புதிய பொருள் தயார்!

மனிதன் முக அழகில் மட்டும் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும், வரிசையாக இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம். குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு கெடாமலும், பல் சிதையாமலும் பார்த்துக் கொள்ளலாம் இதனிடையே பெரும்பாலான சிறுவர்களுக்கு இந்த பற்சிதைவு, பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதை தடுப்பதற்கான புதிய பொருள் (ஸ்வீட்கம்) ஒன்றை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் கூட்டாக கண்டுபிடித்துள்ளனர்.
deeth nov 26
சர்க்கரை மூலம் தயாரிக்கப்பட்ட இப்பொருள், பற்சிதைவை தடுத்து குணப்படுத்தும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இதை பெங்களூரில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு விநியோகிக்க ‘அக்ஷய் பத்ரா’ என்ற அமைப்புடன் அந்த மாணவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இதன்மூலம், கோடிக்கணக்கான இந்திய சிறுவர்கள் பலன் அடைவார்கள் என்று அவர்கள் கூறினர்.

உங்களுக்குத் தெரியுமா?

* 2000 குழந்தைகளில் ஒன்று, பிறக்கும்போதே ஒன்றிரண்டு பற்களுடன் பிறக்கிறது.

* 35 வயதுக்கு பிறகு பற்சிதைவு வேகம் குறைகிறது.

* பிறக்கும் குழந்தைக்கு ஈறுக்குக் கீழே 52 பல் மொட்டுகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து 20 பால் பற்களும், 32 நிரந்தர பற்களும் தோன்றுகின்றன.

* மரணத்துக்கு பின்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உதிராமல் இருக்ககூடியது பல்.

* பாலூட்டிகளுக்கு இரண்டு `செட்’ பற்கள் முளைக்கின்றன.

* நவீன பல் மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் `பியரே பாச்சார்டு’. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மருத்துவரான இவர், முதல்முறையாக பல் மருத்துவ விஷயங்களை முழுமையாக அளித்தார்.

* உயிரின வகைகளுக்கு ஏற்ப பல் அமைப்பு மாறுபடுகிறது. தாவர உண்ணிகளுக்குக் கடைவாய் பற்கள் அதிகமாகவும், விலங்குண்ணிகளுக்கு கோரை பற்கள் அதிகமாகவும் இருக்கின்றன.

*மனிதர்களுக்குக் குழந்தை பருவத்தில் 20 பால் பற்களும், பெரியவர்களாகும் போது 32 நிரந்தர பற்களும் முளைக்கின்றன.