சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!
சிறுமியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் அசராம் பாபு மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து அசராம் பாபுக்கு ராஜஸ்தான் போலீசார் சம்மன் அனுப்பினர். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் நேரில் ஆஜராக அவர் அவகாசம் கோரினார். இதை ஏற்க மறுத்த ராஜஸ்தான் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் அசராம் பாபுவை இந்தூரில் கைது செய்தனர்.
நேற்று காலை இந்தூரில் இருந்து டெல்லி கொண்டு சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ஜோத்பூருக்கு அசராம் பாபு கொண்டு வரப்பட்டார். மன்டோரில் உள்ள ஆயுதப் படை போலீஸ் வளாகத்துக்கு அழைத்து சென்று அவரிடம் போலீசார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Asaram Bapu sent to14-day judicial custody, police say case very strong
****************************************************************************************
Self-styled godman Asaram Bapu has been remanded in 14-day judicial custody. He will be taken to the Jodhpur Central Jail.The case against Asaram Bapu, arrested for allegedly sexually assaulting a 16-year-old girl at his ashram, is “very strong” and the investigation is moving in the right direction, Jodhpur Police on Monday said.