October 16, 2021

சிறிய வங்கி தொடங்க நீங்க தயாரா?

பணப் பரிவர்த்தனைகளுக்காக சிறிய வங்கிகளை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கிட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பம் இந்த மாத இறுதிக்குள் வெளியிடவும் திட்டமிட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். சிறிய கடன்களுக்கான வட்டி நிர்ணயிப்பதை தடுக்க வேண்டியதும் அவசியம் என்று அவர் சுட்டிகாட்டினார்.
Bank nov 14
விவசாயிகளுக்கு மற்றும் சிறிய அளவிலான தொழில்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளைத் தொடங்குவதற்கு மூலதன அளவு ரூ. 500 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 100 கோடி போதும் என ரிசர்வ் வங்கி திருத்தம் செய்து வெளியிட் டுள்ளது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும்.

வழக்கமான வங்கிகளிலிருந்து இந்த சிறிய வங்கிகளின் செயல்பாடு மாறுபட்டிருக்கும். பெருமளவு மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும். இந்த வங்கிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேமிப்புகள் மற்றும் கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இத்தகைய வங்கிகளை தொடங்குவதில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) விதிகளுக்கு உள்பட்டு அனுமதிக்கப்படும்.ஏற்கெனவே செயல்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், நிறுவனங்களின் வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அமைப்புகள் இந்த சிறிய வங்கிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.