October 19, 2021

சிறந்த திரையுல பிரமுகர் விருது வாங்கிய ரஜினிகாந்! வீடியோ

கோவாவில் இன்று இந்திய சர்வதே திரைப்பட விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவினை நடிகர் அமிதாப்பச்சன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். விழாவில் சிறந்த திரையுல பிரமுகருக்கான விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து இந்த விருதினை வழங்கினார்.
rajni nov 21
அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்கி விருது வாங்கியவுடன் இது குறித்து பேசிய ரஜினிகாந்த், இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்தார். மேலும் இந்த விருதை, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு விருதினை அர்பணிக்கிறேன்” என்று பேசினார்.

விழாவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிகர், ரத்தோர், மற்றும் பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். வரும் நவ.,30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 300 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழில் குற்றம் கடிதல் எனும் ஒருபடம் மட்டுமே திரையிடப்படவுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மத்திய அரசு எனக்கு இந்த விருதை கொடுப்பது பெருமையாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் உள்ளது. என்றார்.மேலும் நடிகர் அமிதாப் உடன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதனை என்னால் முடிவு செய்யமுடியாது, அமிதாப் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் சரி என்று சொன்னால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார். அரசியல் பற்றி கேள்விக்கு பதில் அளித்த அவர். இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்றார்.

 

வீடியோ காண:http://www.youtube.com/watch?v=2ePt9YZvyBc&feature=youtu.be