September 20, 2021

சினிமா-ன்னா என்ன தெரியுமா? – சென்சார்-ன்னா என்ன தெரியுமா? – மிஷ்கின் காட்டம்!

ஆர்.பி. ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தற்காப்பு. இதில் ஹீரோவாக நடித்துள்ள்ஃஅ இயக்குநர் வாசுவின் மகன் சக்தி தனது பெயரை சக்திவேல் வாசு என்று இந்தப் படத்தில் இருந்து மாற்றிக்கொண்டுள்ளார். இந்தத் தற்காப்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசும் போது வழக்கம் போல் பட்டாசாய் பொரிந்து தள்ளி விட்டார்.
cine tharkappu
தன் பேச்சில், “இந்தப்படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யுஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்ட வேண்டி யிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரியஅடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக் கிறோம். கெட்டவார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ஏ சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள். கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடா செல்லமே -ன்னா திட்ட முடியும்? நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன்ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்தரம் தேவை. படத் தணிக்கையின்போது சில வார்த்தை களை நீக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை.

சினிமாவைப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும் என்று. சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக்கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன்தான் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும். திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம். பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம். டைட்டானிக் படத்தில் கூட முத்தக்காட்சி உள்ளது.

சென்சாரில் இது குழந்தைகளுடன் பார்க்கமுடியாது என்கிறார்கள். என் படத்துக்குக் குழந்தைகளுடன் வராதீர்கள். பிசாசு படம் பார்த்துவிட்டு சொன்னார்கள், படம் அருமையாக உள்ளது. ஆனால் பிசாசு இருக்கிறது என்றார்கள். பிசாசை மோசமாகச் சித்தரித்துதான் படங்கள் வந்துள்ளன. ஆனால் பிசாசு ஒரு தெய்வம், தெய்வத்துக்கு ஒருபடி மேல். பிசாசைப் பார்த்தால் பயப்படவேண்டாம், என்று ஒரு படம் எடுத்தேன். ஆனால் படத்தில் பிசாசு வந்துவிட்டது, அதனால் ஏ சான்றிதழ் என்றார்கள். இதனால் (இயக்குநர்) பாலாவிடம் திட்டுதான் வாங்கினேன். தணிக்கைக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. கதையை எழுதும்போதும், காட்சியாக எடுக்கும்போதும் எண்ணியதுபோல செய்யமுடியவில்லை. சுதந்தரம் இல்லாவிட்டால் அது என்ன கலை?

நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்தஇடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறது. ஒரு விஷயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவண செய்யவேண்டும்.

நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பொம்ளைங்க வரவேண்டாம். தயவுசெய்துவரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத் துறையைப் பாதுகாக்கவேண்டியது அனைவருடைய கடமை” என்று பேசினார்.