October 19, 2021

சினிமாவில் நடிப்பேன்! – குஷ்பூ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி.யை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தவர். சமீபகாலமாக படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு சின்னத்திரைகளில் மட்டும் ஜட்ஜ் அல்லது ஆங்கராக தோன்றுகிறார்..இந்நிலையில், தற்போது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகvum தேர்வு செய்யப்பட்டுள்ளார் குஷ்பு. அவருக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
kuspoo sep 16
அப்போது அவர்களிடையே குஷ்பு பேசுகையில், ”சின்னத்திரை சங்கத்தில் ராதிகா, நான்(குஷ்பு), குட்டிபத்மினி உள்ளிட்ட அதிகளவிலான பெண்கள் பொறுப்பில் இருக்கின்றோம்.சின்னத்திரையை இன்னும் வளர்ச்சி அடைய செய்ய நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம். அந்ததிட்டங்கள் என்னவென்று சொல்வதை விட அதை நாங்கள் செய்து காட்டுவோம்” என்றார்.

அப்போது சின்னத்திரைக்கு வந்துவிட்டதால் இனி சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ”என்னை பிரமிக்க வைக்கும் அளவுக்கு கதைகள் இருந்தால் கண்டிப்பாக நான் சினிமாவில் நடிப்பேன்” என்கிறார் குஷ்பு.