October 22, 2021

சிகரெட் பிடிச்சா ’புல்லா வியாதி’ வரும் என்று தெரியுமா? By செல்லிஸ்ரீ

சிகரெட் புடிச்சா தொண்டை கான்சர் வரும்,லங் கான்சர் வரும் செத்துபோய்டிவீங்கன்னு சொன்னா ….ஆமாம் புகை பிடிக்குறவங்க எல்லாருக்குமா கான்சர் நோய் வருது சாகறாங்க?..கான்சர் பரம்பரைல வரவங்க புகை பிடிச்சாதான் வரும்னு சப்பக் கட்டு கட்டுகிறவர்களும் இருக்காங்க..இப்ப மொதல்ல ஒரு நல்ல செய்தி சொல்லவா? ஆமாம் எல்லாருக்கும் கான்சர் வராது செத்து போகமாட்டாங்க..ஹையா ஜாலின்னு யாருங்க அது சிகெரெட்ட பத்த வெக்குறது?உங்களுக்கு அதை விட பயங்கறமான விஷயம் சொல்ல போறேன்..நீங்க உயிரோட இருப்பீங்க?
jan 25 - health smoke
என்ன உயிரோட இருப்பது நல்ல விஷயம் தானே இத எப்டி இவ பயங்கறம்னு சொல்றான்னு பார்க்கறீங்களா?
உயிரோடு இருப்பீங்க ஆனா உருப்படியா இருக்க மாட்டீங்க!உபயோகம் இல்லாம இருப்பீங்க..

யாருக்கா? உங்களுக்கே தான்..

என்னன்னு கேக்கறீங்களா?..புல்லா (BULLA )வியாதி வந்துரும் கான்சர விட கொடிது..கான்சராது உயிர எடுக்கும் கொஞ்ச நாள்ல போய் சேர்ந்துடலாம் விடுதல..

ஆனா இந்த புல்லா உங்க வாழ்க்கை கொல்லி..எந்த டாக்டராலும் சரி பண்ண முடியாது,எந்த மருந்தாலும் நிவாரணம் கிடைக்காது ..ஆனா உயிரோடு தினம் தினம் சாவீங்க திண்டாடுவீங்க..

இருங்க இது அப்படி என்ன வியாதின்னு சொல்றேன் ..

விடாது இருமல், ரெண்டு வார்த்த தொடர்ந்து ஒருத்தர் கிட்ட பேச வராது..லொக்க்க்கு லொக்கு உய்ய்ய்ய்ய் ன்னு அடி வயத்துலேர்ந்து இருமல் அடுத்தவங்கள ரெண்டு அடி பின்னாடி எடுக்க வெச்சிடும்..இத்தன நாளா உங்க பேச்ச கேக்க ஆவலா வரவங்க நீங்க குடுக்குற இருமல் சவுண்டல முகம் சுளிப்பாங்க..மூச்சு திணறும் ..தூங்க முடியாது .வெளில வாசல்ல போக முடியாது,ஹோட்டல் போன வர நறுமனம் தாங்காது,சினிமா தியேட்டர்ல சினிமா உகார்ந்து பார்க்க முடியாது..ஒவ்வாமை எந்த மணத்திற்கும், கொஞ்சம் வானm மூடினாலே சளி வந்துடும்…மொத்ததுல ஒடம்புல சக்தியே இருக்காது .சக்தி எது தருது ஆக்சிஜன்..ம்ம்க்ம் இதெல்லாம் ஒன்னாம் வகுப்பு கொழந்த கூட சொல்லும்.ஆனா இப்படி தம் அடிக்கறீங்களே உங்க ஒடம்புல ஒங்க ரத்த்துல எவ்ளோ ஆக்சிஜன் இருக்கும்னு நினைக்கறீங்க?

..போக போக கொறஞ்சு உள்ளே இழுத்த மூச்சு வெளியே வராம கார்பன் டை ஆக்சைடு தான் ஒடம்பு பூரா செட்டில் ஆகும்..செத்துடலாமேன்னு தோணும் வேண்டிப்பீங்க ஆனா சாவு வராது..நொந்து நூடுல்சா போய்டுவீங்க..அழுகையா வரும்…எந்த டாக்டர் என்ன தீர்வு தருவாரான்னு ஆயுர் வேதம் ,அலோபதி ,ஹோமியோ பதி சபா பதி சேது பதின்னு பதி பதியா நிம்மதி தேடி அலைவீங்க..

புல்லான்னா என்னன்னு கேக்கறீங்களா

நம்ம லங்க்ஸ் சுவர்..பலூன் இருக்கு இல்ல அதுல காத்து எவ்ளோ நிரப்ப முடியும்..அதோட சுவர் wall ல அந்த இழுப்பு தன்மை elasticity இருக்குற வரைதானே?..அப்புறம் ஊதினா வெடிச்சிடும்..அதே மாதிரி..இப்படி புகை வண்ட் ஓட்டறவங்களுக்கு லங்க்ஸ் சுவர் மெலிசாகி எலாஸ்டிசிடிய இழந்துடும்..உள்ளே போன மூச்சு வெளியே வராம கார்பன்டை ஆக்சைடா கி கொஞ்சம் கொஞ்சமா அதோட செயல இழக்க ஆரம்பிக்கும் ..திண்டாட்டம் தான்..இதைப் பத்தி மருத்துவ ரீதியா நிறைய எழுதலாம்..

தெரிஞ்சுக்கனும்னா சொல்லுங்க எழுதறேன் பார்ட்-2 ல..படங்களோட படு பயங்கறமா இருக்கு..

ஆனா தேவை இல்ல இப்ப நீங்க சொன்னத கேட்டே என் கையில எடுத்த சிகரெட்ட கீழே போட்டுட்டேன்னு சொல்றவங்களுக்கு எழுந்து நின்னு தலைல இருக்குற தொப்பிய கழட்டி தலை வணங்குகிறேன்..

#கொசுறு# என் அப்பா இந்த வியாதிய 18 வருஷத்துக்கும் மேல அனுபவித்து 80 வயது வரை அமோகமா செத்துக் கொண்டே வாழ்ந்தார்..அப்புறம் நிம்மதியாக செத்தார்..

So Kick the habit of SMOKING or else SMOKING kicks you out of life ..MIND IT !!

செல்லிஸ்ரீனிவாசன்