October 18, 2021

சாலையோரம் தூங்குபவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: F I R போட உத்தரவு!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியான வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்றும் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தண்ட னையை நிறுத்தி வைக்க கோரியும், முன்ஜாமீன் வழங்கக் கோரியும் சல்மான் கான் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுக்கள் இன்று நீதிபதி ஏ.எம்.திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சல்மான்கான் தரப்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, ஸ்ரீகாந்த் ஷிவடே ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 30 ஆயிரம் பிணையத்தொகையுடன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
road sleep
இதனிடையே, பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் டுவிட்டர் மூலம் சல்மான் கானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். இதில், பாலிவுட்டின் பிரபல பாடகரான அபிஜித் மற்றும் பராக் அலிகான் ஆகியோர் தங்கள் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

பின்னணி பாடகர் அபிஜீத் பிரபல டிசைனரும் சல்மான்கானின் நெருங்கிய நண்பருமான பராக் அலிகான் ஆகியோர் தங்கள் டுவிட்டர்களில், ‘‘வீடு இல்லாதவர்கள் சாலைகளிலும், பிளாட் பாரத்திலும் தூங்கலாமா? இப்படித்தான் 4 பேர் தூங்கி இருக்கிறார்கள், இது டிரைவர்கள் தவறோ, போதையில் வந்த தவறோ அல்ல.நீங்கள் ஏன் மும்பை வந்து ரோட்டில் தூங்க வேண்டும். உங்கள் கிராமத்தில் தங்கினால் வாகனங்களே வராது. நீங்களும் சாகமாட்டீர்கள். சாலைகளில் கார்கள் செல்லும், நாய்கள் திரியும், மனிதர்கள் தூங்குவதற்கு அல்ல என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் வீடு இல்லாதவர்களுக்கு தங்குமிடம் வசதி செய்து தராததால் தான் அவர்கள் சாலைகளில் தூங்க நேரிட்டதாகவும் டுவிட்டர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

சாலையில் தூங்கும் மக்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறு கூறிய அபிஜீத், பராகானுக்கு தண்டனை வழங்கக் கோரி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா உள்ளூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு கூடுதல் தலைமை நீதிபதி ராம் சந்திரா பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அபிஜித் பட்டாச்சார்யா, பரா அலிகான் ஆகியோர் மீது முகமத்பூர் போலீஸ் நிலையத்தில் இருவர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார். 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழ்க்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டு உள்ளது