May 7, 2021

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் !

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன், ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
sep 21 - criket


சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ராஞ்சி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், டெல்லி, மொகாலி ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்தியாவில் இருந்து ஐ.பி.எல். போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென்ஆப்பிரிக்காவில் இருந்து டைட்டன்ஸ், லயன்ஸ், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, நியூசிலாந்தை சேர்ந்த ஒட்டாகோ வோல்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அனுபவ வீரர் ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் களமிறங்கும் கடைசி தொடர் இது என்பதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளிலுமே அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் உள்ளதால், இப்போட்டி கடைசி பந்துவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.