September 18, 2021

சவுதி ஆயில் நிறுவன குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி:

அதிகாரப்பூர்வமாக சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ (Saudi Aramco, அரபி: ارامكو السعودية ) சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் 8 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அதிக மதிப்புடையதாகும். சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் இருப்பிலும் தினமும் உற்பத்தி செய்யும் அளவிலும் கணிசமான அளவில் முன்னணியில் உள்ளது. அதன் இருப்பு 260 பில்லியன் பீப்பாய் (4.1 m3) என கணக்கிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள தஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 7.9 பில்லியன் பீப்பாய் (1.26 m3), மற்றும் 100 எண்ணெய் மற்றும் கேஸ் வயல்களை பராமரிக்கிறது. இத்துடன் 279 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும் இருப்பு வைத்துள்ளது. அராம்கோ இயக்கும் கவார் வயல், சாய்பா வயல் ஆகியவை உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களாகும்.
saudi-fire
சிம்பிளாக சொல்வதானால் உலகிலேயே மிகவும் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர்.இவர்களுக்கென தனியாக தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மேல்மாடிக்கும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தவாறு வெளியில் ஓடினார்.

ஆனாலும், தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும், இந்த விபத்து 219 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து படத்தை சவுதி உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ளவர்கள், தீ விபத்து ஏற்பட்டதும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்றது என்று தெரிவித்தனர்.