October 19, 2021

சவுதாலாவை சிறையில் சரணடைய டெல்லி கோர்ட் உத்தரவு!

அரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளக் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா சனிக்கிழமையன்று சிறையில் சரணடைய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
chowdala
ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலா சிறைவாசம் அனுபவித்து வந்தார்.இந்நிலையில் சவுதாலா ஜாமீனில் வெளிவந்தார். அவருக்கு அக்டோபர் 17 வரை ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜாமீன் விதிமுறைகளை அத்துமீறியுள்ளதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். முன் கூட்டியே சரணடையுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா நாளை (சனிக்கிழமை) சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.மேலும் சவுதாலா பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உடனடியாக தடை விதிப்பதாகவும், அவருக்கு தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.