September 18, 2021

சவுக்கு.நெட்டை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம்.!

”பிரச்னை சவுக்கு.நெட்டு தானே? அதை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம். இதன் மூலம் எம் வீச்சு இன்னமும் கூடுதலாகும். நன்றி நீதியரசர் அவர்களே.இதுவரை சவுக்கு தளம் தமிழில் மட்டும் உள்ளது. ஆங்கிலத்தில் இல்லையே என்ற வருத்தம் பலரால் பகிரப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் மற்றும் தமிழில் பகிரப்படும்” என்று சவுக்கு ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.
savukku site
இது குறித்து புதிய சவுக்கு தளத்தில்,”.சவுக்கு தளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த அன்பு உறவுகளே…….சவுக்கு தளம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பல்வேறு வாசகர்கள் துடிதுடித்தனர். தொலைபேசியிலும் முகநூல் வழியாகவும் என்ன ஆயிற்று… ஏது ஆயிற்று என்று பதறினர். மின்னஞ்சல்கள் குவிந்தன.

ஆனால், எதிரிகளோ எக்காளமிட்டனர். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் கூத்தாடினர். யார் அந்த எதிரிகள் ? ஊழலில் திளைக்கும் உயர் உயர் அதிகாரிகள், ஊழலையே உண்டு உயிர்வாழும் அரசியல்வாதிகள், அதிகாரத்தை அள்ளி அள்ளிப் பருகும் மக்கள் விரோத சக்திகள், இவர்கள்தான்.

நீதிபதி சி.டி.செல்வம் ஒவ்வொரு வாரமும், இந்த வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கிறார். அரசுத் தலைமை வழக்கறிஞரை அழைத்து, இன்னும் ஏன் சவுக்கு முடக்கப்படவில்லை என்று கேள்விக்கணைகளை தொடுக்கிறார். சவுக்கு நடத்தும் நபரை ஏன் கைது செய்யவில்லை எனத் துளைத்தெடுக்கிறார்.

சவுக்கு தளம் உயிரைக் கொடுத்து உருவாக்கிய தளம். இந்த தளம் நடத்தியதற்காக பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நட்பின் அடிப்படையில் பத்து பைசா வாங்காமல், தளத்தை வடிவமைத்துக் கொடுத்த முருகைய்யன் 25 நாட்கள் சிறையில் இருந்தார். மேலும் 25 நாட்கள், பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்து கையெழுத்திட்டுச் செல்கிறார். எதற்காக? சவுக்கு தளத்தை வடிவமைத்துக் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஒரு நீதிபதி, ஒரு அப்பாவியை 25 நாட்கள் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்தார். இப்படி பலரின் உழைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த தளம் அது.

இப்படி பாடுபட்டு உருவாக்கிய இத்தளத்தை ஒரு சி.டி.செல்வம் முடக்கி விட முடியுமா என்ன ?

கண்ணீர் விட்டே வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா…

கருகத் திருவுளமோ ????

சரி. பிரச்சினை சவுக்கு.நெட்டுடன் தானே? அதை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம். எம் வீச்சு இன்னமும் கூடுதலாகும். நன்றி நீதியரசர் அவர்களே.

சவுக்கு தளம் தமிழில் மட்டும் உள்ளது. ஆங்கிலத்தில் இல்லையே என்ற வருத்தம் பலரால் பகிரப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் மற்றும் தமிழில்.

cropped-savukkulogo4.jpg

அச்சமின்றி, முதலாளிகளின் நெருக்கடியின்றி, விளம்பரதாரர் மிரட்டலின்றி, எவ்வித சமரசமும் இன்றி, எப்போதும் போலவே செய்திகளை இப்போது புதுப் பொலிவுடன் வாசகர்களுக்கு தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்த புதிய முயற்சியில் சவுக்கோடு துணை நின்ற, தொடர்ந்து நிற்கவிருக்கும் பல்வேறு அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

தங்களின் அன்பும் ஆதரவும்

எப்போதும் போல தொடரும்

என்ற நம்பிக்கையுடன்

சவுக்கு ஆசிரியர் குழு.” என்று தெரிவிக்கப்படுள்ளது