September 24, 2021

சர்வதேச ஹாக்கி நடுவரானார் தீபா குமாரி! இந்தியா சந்தோசம்!

கடந்த 2010-ம் ஆண்டில் ஹாக்கி போட்டிகளில் நடுவராக தனது பயணத்தை துவங்கியவர் தீபா குமாரி. இதுவரை உள்நாட்டு ஹாக்கி போட்டிகள் பலவற்றில் நடுவராக இருந்துள்ளார். 2013-ம் ஆண்டு மகளிருக்கான ஆசிய கோப்பை போட்டி, அண்மையில் நடந்து முடிந்த ஹாக்கே பே கோப்பைக்கான போட்டி உள்ளிட்ட பல வெளிநாட்டு போட்டிகளிலும் நடுவராக இருந்திருக்கிறார்.
hockey may 23
இந்நிலையில், அவருக்கு சர்வதேச அவுட்டோர் அம்பயர் தகுதியை வழங்கியிருக்கிறது சர்வதேச ஹாக்கி சம்மேளனம். சர்வதேச அளவுக்கு தரம் உயர்ந்துள்ள தீபா குமாரிக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ஹாக்கியின் செயலாளர் மொஹத் முஸ்தக் அஹமத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”இந்திய ஹாக்கிக்கு இன்று ஒரு பெருமையான நாள். ஹாக்கி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தீபா குமாரியின் இந்த பிரம்மாண்ட சாதனைக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ஹாக்கி நடுவராக அவர் சாதித்தவையே இன்று சர்வதேச அரங்கில் இந்திய ஹாக்கிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறது. அவர் நிச்சயமாக சர்வதேச அவுட்டோர் நடுவராகவும் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.