October 25, 2021

சர்வதேச யோகா தினம்! மோடி யோசனையை ஐ.நா. பரிசீனை!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27–ந் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் பாரம்பரியமிக்க, உடல், மனம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்த யோகா பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி கூறியதுடன், ஆண்டில் ஒரு நாளை சர்வ தேச யோகா தினமாக அறிவித்து கடைப்பிடிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
modi yoga
இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இது தொடர்பான நடவடிக்கையை ஐ.நா. பொதுச்சபை தொடங்குகிறது.

அந்த வகையில் வரும் 14–ந் தேதி முறையான ஆலோசனையை ஐ.நா. பொதுச்சபை நடத்துகிறது. இந்த ஆலோசனை 2 மணி நேரம் நடக்கிறது. இதில் சர்வதேச யோகா தினம் குறித்த வரைவு தீர்மானம் பற்றி விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.