September 17, 2021

சர்வதேச சைக்கிள் போட்டியில் ஆர்யா!

கோலிவுட்டின் ரியல் மன்மதராசாவான ஆர்யா. மிதிவண்டி ஒட்டுதலை கடந்த சில வருடங்களாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்தார்.. தற்போது தனது தீரா பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் விளைவாய் பார்பவர்களிடமெல்லாம் மிதிவண்டி எனப்படும் சைக்கிளின் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
arya cycle 5
அண்மையில் ஹீரோவாகவே மாறி விட்ட சந்தானத்திடம்,”ஒருவர் சைக்கிள் ஓட்டும் வேகம், அவரது உடல் எடையைப் பொருத்து கலோரி செலவிடுவது மாறுபடும். 50 கிலோ எடை கொண்ட ஒருவர் தோராயமாக மணிக்கு 10 மைல் வேகத்தில் சைக்கிள் ஓட்டினால் 200 கலோரி வரை எரிக்கப்படும். இதுவே, 85 கிலோ எடை கொண்டவராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் 340 கலோரி வரை எரிப்பார். பொதுவாக ஒரு மணி நேரத்துக்கு மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிகபட்சம் 300 – 400 கலோரி வரை எரிக்கப்படும்.

சைக்கிள் ஓட்டுவதால் நம் இதயம், ரத்த ஓட்ட மண்டலத்தின் செயல்பாடு மேம்படுகிறது. சைக்கிளை மிதிக்கும்போது நம்முடைய உடலின் அனைத்துத் தசைகளுக்கும் வேலை அளிக்கப்படுகிறது. இதனால், தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிப்பதுடன், வலிமையையும் அளிக்கிறது. மூட்டுகளின் அசைவை மேம்படுத்துகிறது. எலும்பை உறுதியாக்குகிறது. உடலின் இடுப்புப் பகுதிக்கும், கால்களுக்கும் வலிமை சேர்க்கப்படுகிறது. கால் மூட்டின் அசைவைச் சீர்படுத்தி, பலப்படுத்தும். அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைப்பதால் இதயம் சீராக இயங்குவது உறுதிப்படுத்தப்படும்” என்று ஒரு டாகடர் ரேஞ்சில் சொல்லிதான் அவரையும் ஃபிட் ஆக்கினாராம். இதை சந்தானமே பலரிடம் பகிர்ந்துள்ளார்

இந்நிலையில் ஆர்யா சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். அதன் முதற்படியாக தனது சர்வதேச மிதிவண்டி பந்தய அணி ‘ரைடர்ஸ்’ லோகோவை வெளியிட்டு “வாடேர்ன்ருன்டன் ரேஸ் என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டாலா என்ற ஊரில் நடந்து வருகிறது இப்பந்தயம். தொடர்ந்து 50 வது வருடமாக இந்த போட்டிநடக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. அபாயகரமான வளைவுகள், ஏரிகள்,குளங்கள் மலைகள் சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாகவேண்டும். இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் ‘பயிற்சியை தொடர்ந்தார் ஆர்யா.