September 25, 2021

சர்வதேச அளவில் வளரும் நகரங்கள் பட்டியலில் 3 இந்திய சிட்டி + அதிகரிக்கும் யூத்ஸ்!

உலக அளவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சர்வதேச நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு ஆகிய 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச நகரங்களுக்கான தரக் குறியீட்டை (ஜிசிஐ), லண்டனைச் சேர்ந்த ஏ டி கியார்னி சர்வதேச நிர்வாக ஆலோசனை அமைப்பு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.தொழில் நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், மனித வளம், கலாசார வளம், அரசியல் ஈடுபாடு உள்ளிட்ட அளவீடுகளைக் கணக்கில்கொண்டு, இந்த தரக் குறியீடு தயாரிக்கப்படுகிறது.
edit may 21
அந்தவகையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 125 சர்வதேச நகரங்களுக்கான பட்டியலில் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு ஆகிய 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தையும், பிரிட்டன் தலைநகர் லண்டன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, பாரீஸ், பெர்லின், டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி உள்ளிட்ட நகரங்கள் முதல் 25 இடங்களில் உள்ளன.

இதனிடையே இந்தியாவில் படித்த இளைஞர்கள் எண்ணிக்கை பற்றி தொடர்ந்து சர்வேக்கள் வந்த வண்ணம் உள்ளது. நேற்றுமுன்தினம் வெளியான ஒரு சர்வேயில் கூறிய சில தகவல்கள்:

* இந்தியாவில் இப்போது 23 லட்சம் பேர், தகவல் தொழில்நுட்பம் உட்பட சாப்ட்வேர் போன்ற துறைகளில் தேவைப்படுகின்றனர். ஆனால், 13 லட்சம் பேரை தான் தகுதியுடன் ஐடி உட்பட பல துறை வேலையில் சேர்க்க முடிகிறது.

* இன்னும் ஐந்தாண்டில் மொத்த மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் இளைஞர்களாக இருப்பர். அதிலும், இவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உரிய தகுதி இருந்தாலும் போதுமான அளவில் திறமையுள்ள இளைஞர்கள் குறைவாக இருப்பர் என்று தெரிகிறது.

* கடந்த பத்தாண்டில் ஒரு அதிசயம்: மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. நாஸ்காம் அமைப்பின் கணக்கு படி, ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் இளைஞர்கள் பிஇ உட்பட பொறியியல், மற்றும் தொழில்நுட்ப படிப்பு சான்றுடன் வெளியேறுகின்றனர்.

* இப்போதுள்ள நிலையில் 25 சதவீதம் வரை தொழில்நுட்ப பட்டதாரிகள், 15 சதவீதம் மற்ற படிப்பு படித்த பட்டதாரிகள் தான் வேலைவாய்ப்புக்கு உரிய குறைந்தபட்ச திறமை, தகுதியுடன் உள்ளனர்.

* அதிக அளவில் கல்லூரிகள் வருவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், இப்படி வேலைவாய்ப்புக்கு உரிய தகுதியில்லாமல் பட்டதாரிகள் உருவாவது இன்னொரு பக்கம். இதை இனியாவது கவனத்தில் கொண்டு இளைஞர்களை தகுதி, திறமை சார்ந்தவர்களாக உருவாக்க வேண்டும். என்று சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகப் பொருளாதார சூழ்நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை, புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில்,”இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது, நிகழ் ஆண்டு 7.6 சதவீதமாக உயரும். அடுத்த ஆண்டு 7.7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது, இந்த ஆண்டு 7 சதவீதமாக உயரும். அடுத்த ஆண்டில் 6.8 சதவீதமாக இருக்கும்.

தெற்காசியப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு 6.7 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6.9 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் உதவும்”என்று கூறப்பட்டுள்ளது