September 24, 2021

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் ஃப்ரீ ஆப்ஸ்!

ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் இந்தியாவில் ஒருவர் சர்க்கரை நோயினால் இறக்கிறார் என்றால் அது மிகையல்ல. அந்த மாதிரி மிக வேகமாக பரவி வரும் சர்க்கரை நோய் இருப்பதே பல பேருக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. இவர்களை டாக்டர்கள் நடமாடும் வெடிகுண்டு என குறிப்பிடுகிறார்கள், ஏன் என்றால் இவர்கள் எந்த நேரத்தில் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என்பது யாருக்குமே ஏன் அவர்களுக்கே தெரியாது என்பது தான் உண்மை.
ravi  14
சர்க்கரை நோயை முற்றிலும் குணபடுத்தமுடியுமா என்று கேள்வி கேட்பதை விட சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தால் வாழ் நாள் முழுவதும் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்ற உண்மை பலருக்கு தெரிந்தும் அதை கட்டுக்குள் வைக்க அவர்களுக்கு தேவை தினமும் அறிவுரை தான். அவ்வகை அறிவுரை கொடுக்க ஒருத்தர் முடியுமா அதுவும் 24 மணி நேரமும் அவர்களை கண்காணித்து என்றால் இப்போது முடியும் அதுவும் மொபைல் ஆப்ஸ் வழியே.

நியூயார்க்கை சேர்ந்த Noom Inc என்னும் நிறுவனம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஆப்ஸை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த ஆப்ஸில் உங்க சில பேஸிக் தகவல்களை போட்டால் உங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் கண்கானிக்கும் எதை சாப்பிட்டால் என்ன கேலரி என்ன சத்து என்ன பாதகம் எவ்வளவு உடற்பயிற்சி என உங்களை ஆரோக்யமாக வைக்கும் இந்த ஆப்ஸை இன்றே இலவசமாக டவுன்லோட் செய்து ஆரோக்கியத்தை பேணுங்கள் –

நீங்கள் தேட வேண்டிய ஆப்ஸின் லின்க் இங்கே……………….https://play.google.com/store/apps/details?id=com.noom.health&hl=en

எனக்கு டயாப்பீட்டீஸ் இல்லை ஆனா உடலை நல்ல மெயின்ட்டன் பண்ணனும் அதனால எனக்கு என்ன சாப்பிடுறேன் என்ன கிழிக்கிறேன் – என்ன கழிக்கிறேன்னு டீட்டெயில் வேணும்னா – அவங்களுக்கு – https://play.google.com/store/apps/details?id=com.wsl.noom&hl=en –

ஆப்பிள் – https://itunes.apple.com/in/app/noom-coach-weight-loss/id634598719?mt=8

FREE APP for Diabetic Patients and Diet Conscious People