சரிந்து வரும் டாஸ்மாக் விற்பனையை சமாளிக்க் வருகிறது மினி குவார்ட்டர்!!!

அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற மூன்று விதமான முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதால் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதைக் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை ஈடுகட்ட மினி குவார்ட்டர் பாட்டில்களை விநியோகிக்க டாஸ்மாக் திட்டமிட்டிருப்பதாக் கூற்ப்ப்டுகிறது.
6 - Tasmac Today status
தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினந்தோறும் சராசரியாக 67 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் வகைகள் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன.

இந்நிலையில் சென்ற செப்டம்பர் மாதம் 2.88 கோடி பாட்டில்களை உள்ளடக்கிய 24 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் மதிப்பு 288 கோடி ரூபாய். அதேசமயம், கடந்த ஆகஸ்ட் மாதம் 324 கோடி ரூபாய் மதிப்பிலான 27 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. இது கடந்த ஜூலை மாதம் 29 லட்சம் பெட்டிகளாக இருந்தது.

மது வகைகள் விற்பனை ஜூலை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே 46 லட்சம், 45 லட்சம் மற்றும் 43 லட்சம் பெட்டிகள் குறைந்துள்ளன. இப்படி டாஸ்மாக் விற்பனை தொடர் சரிவுக்கு, போலி சரக்கு விற்பனையே காரணம் என கூறப்படுகிறது.

அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற மூன்று விதமான முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான ‘குடிமகன்’கள் தங்கள் செலவை குறைத்துள்ளனர். இதுவும் சரக்கு விற்பனை சரிவுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.இதை ஈடுகட்ட மினி குவார்ட்டர் பாட்டில்களை விநியோகிக்க டாஸ்மாக் திட்டமிட்டிருப்பைதாக் கூற்ப்ப்டுகிறது.