October 16, 2021

சரத்குமார், ராதாரவி மீது போலீசில் புகார் கொடுக்க நடிகர் சங்கம் முடிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 4வது செயற்குழு கூட்டம் நேற்று(ஜனவரி 17) நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. 2011ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக நடிகர் சங்க வளாகத்திலேயே செயற்குழு கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
DSC_2536
நேற்றையகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்,

* பழைய நிர்வாகத்தின் போது SPI சினிமாஸ் நிறுவனத்துக்கும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கும் இடையே போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் முழுவதுமாய் ரத்து செய்யும் அறக்கட்டளையின் முடிவை தென்னிந்திய நடிகர் செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

* தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-15ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கான 2013-15, 2014-15ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு மூன்று மாதங்கள் கழித்து முழுமையாக சமர்பிக்காததால் சென்ற நிர்வாகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மீது பொருளாதார குற்றப்பிரிவிடம் புகார் கொடுக்க முடிவு

* குருதட்சணை திட்டம் என்கிற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கும் திட்டத்தை வடிவமைத்த துணைத்தலைவர் பொன்வண்ணனுக்கும், வெற்றிகரமாய் செயல்படுத்திய கோவைசரளா, பசுபதி, ரமணா, உதயா, பூச்சிமுருகன், விக்னேஷ், நந்தா, பிரேம், ஹேமச்சந்திரன், மனோபாலா, ஜீனியர்பாலையா, ராதா ஆகியோருக்கு செயற்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறது.

* ஏற்கனவே, துணைத்தலைவர் திரு.கருணாஸ் அவர்களின் பொருப்பில் ஏற்படுத்தப்பட்ட AROக்கள் சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்த சிவகாமி,குட்டிப்பத்மினி, லலிதாகுமாரி, உதயா, பிரேம், மருதுபாண்டி, விக்னேஷ் கொண்ட உபகுழு அமைக்கப்படுகின்றது

இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பொருளாளர் கார்த்தி நடிகர் சங்க கணக்கு வழக்குகளை செயற்குழுவில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன் நன்றி தெரிவிக்க செயற்குழு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.