September 29, 2021

சமூக மேம்பாட்டில் ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்தது இலங்கை!

உலகளாவிய அளவில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் சமூக மேம்பாடு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.உணவு, உறைவிடம், குடிநீர், மருத்துவ சிகிச்சை, குடிநீர், கழிவுநீர் அகற்றல், கல்வியறிவு, பொது அறிவு, தகவல் அறியும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு, தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனம் 132 நாடுகளில் ஆய்வு நடத்தியது.
Society Logo
இதன் அடிப்படையில், சமூக முன்னேற்றம்-2014 என்ற தலைப்பில் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தையும், அதற்கு அடுத்த இடங்களை சுவிட்ஸர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் பெற, பொருளாதார வளர்ச்சியில் 94-வது இடத்தில் உள்ள இந்தியா, சமூக முன்னேற்றத்தில் 102-வது இடத்தை பிடித்து, மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில், ஆசியா கண்டத்தில் முதலிடத்தை பிடித்த இலங்கை 85-வது இடத்திலும், பாகிஸ்தான் 124-வது இடத்திலும் உள்ளது.‘பிரிக்ஸ்’ நாடுகள் என்றழைக்கப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளில் 100-க்கும் குறைவான இடத்தை பிடித்த ஒரே நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் 46-வது இடத்தையும், சீனா 90-வது இடத்தையும் பெற்றிருக்கும் நிலையில், இந்தியா 102-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தை ‘சாட்’ பிடித்துள்ளது.