September 29, 2021

சன் டி வி-யின் எக்ஸ் நிர்வாகி சக்சேனா வெளியிடும்”1 பந்து 4 ரன் 1 விக்கெட்”-ஆல்பம்

வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத், ஸ்ரீமன், சென்ட்ராயன், ஜீவா நடிக்கும் 1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படத்தை வீரா இயக்குகிறார், படத்தை இயக்குனர் வீரா தந்த முன்னோட்டம் இது…”இது கிரிக்கெட் படம்தான் ஆனால் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய படம் அல்ல. திகில் படம். கிரிக்கெட்டிற்கும் திகிலுக்கும் என்ன சம்பந்தமுன்னு நினைக்கலாம். ஹீரோ ஒரு நாள் வீட்டுல நள்ளிரவில் உட்கார்ந்து இந்தியா பாகிஸ்தான் பைனல் கிரிக்கெட் பார்த்துகிட்டு இருக்கான்.இந்தியா ஜெயிக்கிறதுக்கு ஒரு பால்தான் இருக்கு நாலு ரன் எடுக்கணும் அந்த கடைசி பந்தை இந்திய வீரன் எதிர்கொள்ளும்போது திடீர்னு ஒரு விஷயம் ஹீரோவுக்கு நடக்குது. அங்கிருந்து திகில் தொடங்குது.இது பேய் படம் ஆனா பாசிட்டிவான பேய். அந்த பேய்க்கு ஒரு ஆசை இருக்கு அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அது என்ன செய்யுது என்பதுதான் படம். திகில், கிளாமர், காமெடின்னு ஒரு கிரிக்கெட் பைனல் ரேன்ஞ்சுக்கு பரபரப்பா படத்தை எடுத்திருக்கோம் என்கிறார் வீரா.விரைவில் டி வி சேனல் ஆரம்பிக்கப் போவதாக அழுது கொண்டே சொன்ன ஹன்ஸ்ராஜ் சக்சேனா இப்படத்தை வாங்கி வெளியிடுகிறாராம்!