September 17, 2021

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் நாற்காலி தூக்கும் போராட்டம்!

மாநில தலைமை தகவல் ஆணையத்தின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவை சிறையில் இருந்து விடுவிக்க கோரியும், தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர், நேற்று பிற்பகலில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தலைமை தகவல் ஆணைய அலுவலகத்தின் முன் நாற்காலி தூக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கைதான சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகிறார்.
tamilnadu dec 10
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் நிருபர்களிடம் ”தமிழக அரசு, பலநூறுகோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீண் ஆடம்பர செலவுகளுக்குச் செலவு செய்திருப்பது குறித்த விவரங்களை அம்பலப்படுத்த தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பிப் 2014ல் விண்ணப்பித்திருந்தோம் ( 30 நாட்களுக்குள் கொடுத்திருக்க வேண்டிய தகவலை 300 நாட்களுக்கு மேல் ஆகியும் கொடுக்கவில்லை) இதுகுறித்த மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்த(07-01-2015 அன்று) சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் விசாரணையின் போது அமர நாற்காலி கேட்டார். நாற்காலி மறுக்கப்பட்டது. ஆணையத்தால் அளிக்கப்பட்ட பொய்புகாரின் பேரில் 294(b), 353, 506(1) பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது தமிழகத்திலுள்ள தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனைக் கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கமும், பல்வேறு சமூக நல அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து மாநில தகவல் ஆணையத்தின் முன்பாக நாற்காலி தூக்கும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
கோரிக்கைள்
1. சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ மீது போடப்பட்ட பொய்வழக்கு திரும்பப்பெறப்பட வேண்டும்.
2. மேல்முறையீட்டு விசாரணைக்கு வரும் மனுதாரர்களை தகவல் ஆணையர்கள் மரியாதையாக நடத்த வேண்டும். விசாரணையின்போது மனுதாரர்கள் அமர்வதற்கு நாற்காலி தரப்படவேண்டும். மனுதாரர்கள் ஆணைய வளாகத்திற்குள் வாகனம் நிறுத்த அனுமதிக்கப்படவேண்டும்.
3. தகவல் உரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் மனப்போக்கு கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியை பதவி நீக்கம், தமிழக அரசு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்.
4. ஆண்டுக்கணக்கில் வழக்குகளை இழுத்தடிக்காமல் குறித்த காலத்தில் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். தகவல் தராத அரசு அலுவலர்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்க சட்டவழிமுறைகள் இருந்தும், ஊழல் அதிகாரிகளை காப்பதற்காக தகவல் ஆணையம் இதைச் செய்வதில்லை.
5. ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். ” என்று தெரிவித்தார். இந்நிலையில் கைதான சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகிறார்.