September 20, 2021

சட்டசபையில் கலவரத்தை தூண்டி திமுகவை வெளியேற்ற சதி! -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் யாரும் ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக செயல்படக்கூடாது என்பதற்காக சபைக்குள் ஒரு கலவரத்தை தூண்டி திமுக உறுப்பினர்களை வெளியேற செய்ய ஆளும் கட்சி திட்டமிடுகிறது என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
stalim sep 2
தமிழக சட்டசபையில் அமைச்சர்தோப்பு வெங்கடாசலம் பேசும் போது கடந்த மைனாரட்டி திமுக அரசில் மாசுகட்டுப் பாட்டுத்துறை காசுகட்டுப்பாட்டுத்துறையாக இருந்தது என்று பேசினார் .இதற்கு மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமைச்சர் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்… ஆதாரங் கள் வெளியிட்டால் அந்தகருத்துக்கள் அவை குறிப்பில் இடம் பெறட்டும் இல்லை என்றால் அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்கி விடுங்கள் என மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புசெய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ”தாமிரபரணி, காவிரி ஆறுகளில் கழிவு நீர் கலந்து மாசுபடுவது குறித்து பல்வேறு பிரச்னைகளை பற்றி பேச கவனஈர்ப்புதீர்மானம் கொண்டு வந்தோம். அவையில் எதை பேசுவதற்கும் அனுமதி தருவதில்லை.அமைச்சர் தோப்புவெங்கடாசலம் பேசுகிற போது வார்த்தைக்கு வார்த்தை கடந்த மைனாரட்டி திமுக அரசு மைனாரட்டி திமுக அரசு என்றேபேசுகிறார். நாங்கள் மைனாரட்டியாக இருந்தாலும் 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சிசெய்தோம் .இப்போது முதல்வராக இருக்கிறவர் பலமுறை ஆட்சியில் இருந்து இறங்கி மீண்டும் வந்து ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.இதை என்னவென்று சொல்ல.கடந்த எங்கள் ஆட்சியில் மாசுகட்டுப்பாட்டுத்துறை காசுகட்டுப்பாட்டுத்துறையாக இருந்தது என்று ஆதாரம் இல்லாமல் அமைச்சர் குற்றம்சாட்டுகிறார். ஆதாரம் இருந்தால் அவைகுறிப்பில் இருக்கட்டும் இல்லை என்றால் அவைகுறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று சொன்னேன்.அதையும் சபாநாயகர் ஏற்க மறுக்கிறார்.

சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் பேசமுற்பட்டால் ஒருகலவரத்தை உண்டு பண்ணி அதன் மூலம் எங்களை வெளியே தள்ள ஆளும் கட்சி முயற்சிக்கிறது.அ தற்கு இந்த சபாநாயகரும் உடன்படுகிறார்.அவர் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார்.இதே அவையில் நேற்று பேசிய ஒரு அதிமுக பெண் உறுப்பினர் 2ஜி குறித்து ஆதாரம் இல்லாமல் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதையும் அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டோம். அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்கள்.ஆனால், எந்த வார்த்தையும் நீக்கப்படவில்லை. இவைகளை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.இவர்கள் 2ஜி பற்றி பேசும் போது, இவர்களின் முதல்வர் மீது உச்சநீதிமன்றத்திலே வழக்கு நிலுவையில் இருக்கிறதே அதைப் பற்றி எங்களால் பேசமுடியாதா. இப்படி ஏதாவது ஒன்றை ஏற்படுத்தி எங்களை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார்கள்.இப்போது வெளிநடப்பு செய்த நாங்கள் மீண்டும் அவைக்குள் செல்வோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். பேட்டியளித்து முடிந்ததும் மீண்டும் அவைக்குள் திமுக உறுப்பினர்கள்சென்று அமர்ந்தனர்.

கோடங்கி