September 20, 2021

சச்சின் .. சச்சின் -செஞ்சுரியை தவற விட்ட சச்சின்!

தனது 200 -வதுகடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்சில் 74 ரன்களுக்கு டியோரியா பந்தில், சமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 117 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் சச்சின் 74 ரன்களை அடித்தார். இதையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் சச்சின் மொத்தம் 15,921 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
nov 15 - SachinTendulkar--
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் 38 ரன்களுடன் களம் இறங்கிய சச்சின்,2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் சச்சின் மிகவும் கவனமாக விளையாடினார்.38 ரன்னில் களத்தில் இருந்த சச்சின், அபாரமாக விளையாடி தனது 68வது அரை சதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார்.

பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் துரதிர்ஷ்டவசமாக டியோரியா பந்தில் சமியிடம் கேட்ச் கொடுத்து சச்சின் ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 74 ரன்னுடன் விடை பெற்றார் சச்சின்.

இதையடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று ‘தேங்க்யூ சச்சி்ன்’ என்று விண்ணதிர கோஷமிட்டனர். சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தி, சச்சினுக்கு முதல் இன்னிங்சில் விடை கொடுத்தனர்.

Sachin Tendulkar out at 74, fans disappointed

**********************************************************
Only a special effort could have stopped Sachin Tendulkar today. All the West Indies bowlers tried, but failed miserably. It was Darren Sammy’s brilliance in the field which stopped the Tendulkar show! Sachin Tendulkar got out at 74 today, which is probably his last innings.