October 20, 2021

சசிகுமாரின் ‘பிரம்மா’ மினி ஆல்பம்!

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் மோகன் பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு. பல்வேறு வெற்றி படங்களைத் தயாரித்த அவர் கமலின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்கத்தில் உருவாக்கும் புதிய படம் ‘பிரம்மன்’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். அத்துடன் கன்னட நடிகர் சுதீப், சந்தானம், லாவண்யா திரிபாதி, நவீன் சந்திரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.