September 18, 2021

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி வாய்ப்பு!

நிலக்கரி தயாரிப்பில் பிரசித்தி பெற்ற கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கோல்கட்டா மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
coal_india_logo
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: கோல் இந்தியா நிறுவனத்தில் என்விரான்மென்ட் பிரிவில் 72ம், நிதிப் பிரிவில் 73ம், பெர்சானல் பிரிவில் 26ம், சேல்ஸ் அண்டு மார்கெடிங் பிரிவில் 31ம், கம்யூனிடி டெவலப்மெண்ட் பிரிவில் 120ம், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் 17ம் சேர்த்து 339 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 01.04.2014 அடிப்படையில் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. என்விரான்மென்ட் பிரிவிக்கு இத்துறையில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பு தேவை. நிதிப் பிரிவுக்கு சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., தேவை. பெர்சானல் பிரிவிற்கு எம்.பி.ஏ., அல்லது இப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பி தேவைப்படும். மார்கெடிங் பிரிவுக்கு எம்.பி.ஏ., அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பு தேவைப்படும். கம்யூனிடி டெவலப்மென்ட் பிரிவுக்கு இரண்டு வருட முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.04.2014

இணையதள முகவரி: www.coalindia.in/career/CurrentOpening.aspx