September 18, 2021

கோலிவுட்டின் மார்ச் மாத லாப நஷ்ட அலசல்! By வெங்கட்

மார்ச் மாத தமிழ் சினிமா … கிட்ட தட்ட 16 திரைப்படங்கள் வெளிவந்து முடிந்து போய் உள்ளது.
பட்ஜெட் அதிகமான ஒரே காரணத்தால் குக்கூ முழுமையான வெற்றி அடையாமல் … ஆனால் தரமான படம் என்ற முத்திரை பெற்றது.திரைப்படத் துறையின் தொழிலாளர்கள் நலம் பெற .. உப நடிகர்கள் வளம் பெற ……… என்றென்றும் .. எதிர்வீச்சு .. வீரன் முத்து ராக்கு ( 25 வது நாள் போஸ்டர் ஒட்டப்பட்டது) காதல் சொல்ல ஆசை .. பனி விழும் நிலவு … போன்ற படங்கள் வினியோகஸ்தர்களை பாதிக்காமல் விலகிகொண்டது…
cinema film
இன்னும் சில திரைப்படங்கள் குறித்து ..

1. ஆதியும் அந்தமும் … நிச்சயம் நல்ல முயற்சி .. அஜய் நேர்த்தியான நடிப்பு .. ஆனாலும் சம்மந்த பட்டவர்கள் அனைவருக்கும் அனுபவம் குறைவு என்பதை வெளிச்சமாக்கிய திரைப்படம்தான் இந்த ஆதியும் அந்தமும் .. ஆனால் இனி அஜய் ஒரு ரவுண்ட் வருவார் நடிகாராக என தோன்றுகிறது.

2. ஒரு மோதல் ஒரு காதல் .. அஷோக் நடிப்பு மட்டுமே குறிப்பிட வேண்டிய அம்சம்

3. மறு முகம் .. நல்ல முயற்சி .. நல்ல நடிப்பு (டேனியல் பாலாஜி) .. முழுமை இல்லை

4. விரட்டு .. தன் மகனை நாயகனாக்க .. தந்தை தயாரித்து இயக்கிய படம். செலவு
எக்கச்சக்கம் .. தரன் இசை அற்புதம் .. வித்தியாசமான கதை .. பலவீனமான ….திரைக்கதை ..

5. யாசகன் .. முற்றிலும் நிராகரிக்க முடியாத படம் .. ஆனால் அதுதான் நடந்தது.

6. ஒரு ஊர்ல .. தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதை .. நல்ல நடிப்பு .. சிறந்த இசை …  இருப்பினும் கூட்டத்தில் காணாமல் போனது துரதிருஷ்டமே.

7…இனம்… எது சொன்னாலும் அரசியலாகும் ..

8. கேரள நாட்டிளம் பெண்களுடனே … காணாமல் போன நல்ல முயற்சி.

இப்போது சில முக்கிய திரைப்படங்கள்

1. நிமிர்ந்து நில் … வெளியீட்டில் ஏற்பட்ட தாமதம் ..திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் இருந்த தெளிவற்ற திரைக்கதை .. திணிக்கப்பட்ட பாடல்கள் .. இதையெல்லாம் மீறி … வித்தியாசமான .. பிரும்மாண்டமான கருத்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் ஆதரித்த படம் .. தயாரிப்பாளருக்கு மட்டும் நஷ்டம் … மற்ற அனைவருக்கும் லாபம் ( என்ன செய்ய செலவுகளும் அதிகம் சம்பளங்களூம் அதிகம்

2. நெடுஞ்சாலை .. நல்ல படைப்பு .. நல்ல விளம்பரம் .. நலா நடிப்பு .. ஆனாலும் நஷ்டம்

3…குக்கூ … யதார்த்தமாக தொடங்கி சினிமாத்தனமாக முடியும் திரைப்படம் .. வளமான பலமான ரசனையுள்ள தயாரிப்பாளர்கள் .. எழுத்தில் வீச்சு உள்ள ஒருவர் இயக்கத்திலும் அதே அளவை அடைய முயற்சித்த படம் நடிகர்கள் பங்களிப்பு அற்புதம்(இயக்குனர் பங்கும் உண்டு) அனாலும் செலவு அதிகம் என்பது உண்மை …
வெற்றி போல் தோன்றும் படம்

ஜனவரியில் கோலிசோடா …..

பிப்ரவரியில் தெகடி …

மார்ச் மாதம் ????????????????? ஒரு திரைப்படம் கூட முழுமையான வெற்றி பெறவில்லை என்பதே உண்மை …

குக்கூ திரைப்படம் … முக்கால் வெற்றி என சொல்லலாம் (செலவும் நீளமும் குறைத்திருந்தால் முழு வெற்றி பெற்றிருக்கலாம்)

மார்ச் மாதம் …. துவக்கமே சரியில்லை… பார்க்கலாம்

வெங்கட் சுபா