October 16, 2021

கோலிவுட்டின் ஒன்றரை மாத லாப நஷ்டக் கணக்கு!

கோலிசோடா’ மட்டுமே இந்தாண்டின் இதுவரையில் வெளிவந்த படங்களிலேயே பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவும் இத்தனைக்கும் அஜீத் விஜய் தனுஷ் சிம்பு ஜெயம் ரவி என எந்த கதாநாயகன் அல்லது முருகதாஸ் ..ஹரி .. ஷங்கர் .. முதல் இப்போதுதான் வந்திருக்கும் வெற்றி இயக்குனர்கள் வரை கேட்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு கூட ஒரு தயாரிப்பாளருக்கும் கிடைப்பதில்லை எனவும் பிரபல சினிமாத் துறை ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான வெங்கட் கூறியுள்ளார்.!
Cine goli-soda-feb 12
அவர் இது பற்றி மேலும் கூறுகையில்..

“ஜனவரி மாதம் வெளி வந்துள்ள திரைப்படங்கள்… 1. அகடம் 2. அத்திமலை முத்துபாண்டி 3. என் கதை புதிது 4 கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு 5. முன் அந்தி சாரல் (இந்த ஐந்து படங்களூம் அதிக அல்லது மொத்த முதலீட்டையும் இழந்த திரைப்படங்கள்)

6. நம்ம கிராமம் (இது பாராட்டுக்க்களை மட்டுமே பெற்ற படம்)

7. ஜில்லா (தயாரிப்பாளருக்கு லாபம் … சில வினியோகஸ்தர்களுக்கு லாபம் .. சிலருக்கு நஷ்டம் .. )

8. வீரம் (தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை. இருந்தாலும் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். வினியோகஸ்தர்களில் பலருக்கும் நஷ்டம். சிலருக்கு சிறிய அளவு லாபம்.)

9. கலவரம் 10 . நேர் எதிர் 11. மாலை நேர பூக்கள் 12. நினைவில் நின்றவள் 13. விடியும் வரை பேசு (இந்த ஆறு படங்களும் நிறைய நஷ்டத்தைச் சந்தித்த பபடங்கள்)

14. மாலினி 22 பாளையங்கோட்டை (இந்த படம் பெரிய நஷ்டம். ஆனால் ஓரளவு பாராட்டுக்களைப் பெற்ற படம்)

15. நினைத்தது யாரோ (படம் மோசமில்லை அனால் நஷ்டம்.)

16. ரம்மி (அனைவருக்கும் நஷ்டம். )

17. இங்க என்ன சொல்லுது (முக்கிய வினியோகஸ்தர் ஒருவருக்கு பெரிய அளவில் நஷ்டம். )

18. congradulations to goli soda… இந்த ஒரே திரைப்படம் மட்டும்தான்… தயாரிப்பாளர்.. இயக்குனர்.. வினியோகஸ்தர்கள்.. திரை அரங்கு உரிமையாளர்கள்… என அனைவருக்கும் லாபமோ லாபம் …

ஆக, இதுவரையில் வெளிவந்த 17 படங்களில் பல கோடிகளை இழந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள். ‘கோலிசோடா’ மட்டுமே அதன் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்து கொடுத்திருக்கிறது…” என்கிறார்..

மேலும் இவர்,”இன்று K B FILMS பாலு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன் .. என்ன சார் ரொம்ப நாளாச்சே படம் எடுக்கலையா என கேட்டேன் .. பொரிந்து தள்ளி விட்டார் .. ” நான் எடுத்த வெற்றிப் படங்கள் அனைத்திலும் நான் .. HEROவுக்கு ..கொடுத்த சம்பளத்தை விட அதிகமாக மிக அதிகமாகத்தான் லாபம் பார்த்தேன் .. அஜீத் விஜய் தனுஷ் சிம்பு ஜெயம் ரவி என எந்த கதாநாயகன் அல்லது முருகதாஸ் ..ஹரி .. ஷங்கர் .. முதல் இப்போதுதான் வந்திருக்கும் வெற்ரி இயக்குனர்கள் வரை கேட்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு கூட தயாரிப்பாளருக்கு கிடைப்பதில்லை .. ஏன் சார் படம் எடுக்கணும் ” …..பாலு சார் நீங்க சொல்லுவது சரிதான் .. நீங்க விலகிக்குங்க .. இழக்க தயாராய் தினம் நாலு புரொட்யுசர் வந்துகிட்டே இருக்காங்க .. ok” என்றும் குறிப்பிட்டுள்ளார்

வெங்கட அலசல்படி ரொம்ப சின்ன பட்ஜெட்.. மார்க்கெட் ஆர்ட்டிஸ்ட்டுகள் யாரும் படத்தில் இல்லை.. சின்ன கதைதான்.. ஆனால் அதனை படமாக்கியவிதமும், இயக்கமும் சேர்ந்து படத்தின் தரத்தை வெகுவாக உயர்த்திவிட்டது. பத்திரிகைகள் முதல் நாளிலேயே படத்தின் தரம் குறித்து உயர்வாக எழுத.. படம் பார்த்த ரசிகர்களின் மவுத்டாக்கும் இதற்குச் சமமாக வெளியில் பரவியது.. இதன் பின்னர் நடந்ததெல்லாம் படத்தோடு சம்பந்தப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் மேஜிக்.. மேஜிக்.. மேஜிக்..

சமைத்ததையே சமைத்துக் கொடுத்து பாராட்டு வாங்குவது இனிமேல் முடிகிற விஷயமல்ல என்பதை தமிழ்ச் சினிமாவின் படைப்பாளிகள், இந்த ‘கோலிசோடா’வை பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டும்..!

வித்தியாசம்.. இதுவரையில் பார்க்காத ஒரு பரவசம்.. நேர்த்தியான இயக்கம்.. மனதைத் தொடும் நடிப்பு.. இத்தனையும் ஒன்று சேர இருந்தால், இது போன்ற வெற்றிப் படங்களில் லிஸ்ட்டில் உங்களின் படங்களும் இடம் பெறும்..!

நன்றி : www.tamilcinetalk.com/