January 29, 2022

கோட்டை,அரண்மனை போன்ற புராதன இடங்களில் ஷூட்டிங் நடத்த திடீர் தடை

கர்நாடகாவில் மைசூர் அரண்மனை, திப்பு சுல்தான் கோட்டை என சரித்திர புகழ்பெற்ற பல்வேறு புராதன இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இதுவரை சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது திடீரென புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்த கர்நாடக அரசு தடை விதித்திருக்கிறது.
sep 25 - cine ban
காரணம் இதுபோன்ற இடங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் இடங்கள் இங்கு ஷூட்டிங் நடத்த வருபவர்கள் காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நினைவு சின்னங்கள் மீது எண்ணெய் தடவி பளபளப்பாக்குகின்றனர். சில இடங்களில் மாற்றங்களும் செய்துவிடுகின்றனர். இதனால் தொன்மை சீரழிக்கப்படுகிறது. அந்த இடங்களில் குப்பைகளை கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இத்தகைய செயல்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்தி அதை வெளியிடும்போது உலகம் முழுவதும் அதன்புகழ் பரவுகிறது. அங்கு ஷூட்டிங் நடத்த் தடை விதித்தால் சினிமா மூலம் கிடைக்கும் புகழ் கிடைக்காமல்போய்விடும். எனவே பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கி ஷூட்டிங் நடத்த அனுமதி தர வேண்டும்’ என்று கர்நாடக திரையுலகினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

கோடங்கி