October 24, 2021

கோலிவுட் மினி ரீல் By கோடங்கி!!

முன்னணி நடிகர்களை இயக்கி சூப்பர் ஹிட்களை கொடுத்து இந்தியாவின் நம்பர் 1 இயக்குனராக திகழும் டைரக்டர் மணிரத்னம் கால்ஷுட் கேட்டு யாராவது அப்புறம் பார்க்கலாம் என்று எந்த நடிகராவது கூறுவார்களா?அப்படித்தான் நடந்துள்ளது அண்ணன் தம்பி நடிகர்களிடம்!. சூரயா & கார்த்தியிடம் இந்த டாப் இயக்குனர் முன்பே அணுகியுள்ளதாக செய்திகள் இப்போது(ம) வருகின்றன.அப்போது நிச்சயம் தன் படத்தில் பிரதர்ஸ் நடித்தால் அது பெரிய ஹிட் ஆகும், லாபம் அள்ளலாம் கதைக்களம் அப்படி இப்படி என்றெல்லாம் டைரக்டர் கூறினாராம்.லாபம் வரும், பெயர் புகழ் உயரும் என்றெல்லாம் இயக்குனர் ஓபன் பிராமிஸ் செய்தும், பிரதர்ஸ் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். கதை, கால்ஷீட், ரோல்கள் இவையெல்லாம் ஒத்துவந்து திருப்திகரமாக இருந்தால் பார்க்கலாம் என்று பிரதர்ஸ் கருதுகிறார்களாம்.இந்த இயக்குனரின் சமீப தோல்விகள் பிரதர்ஸை இதுபோன்று சிந்திக்கவைத்துள்ளதோ என்னவோ தெரியவில்லை.
kodanki
‘தல’ அஜித்தின் ஆரம்பம் கிராண்ட் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் அவரின் அடுத்த படமான “வீரம்” விறுவிறுவென வளர்ந்து வருகிறது.
இந்தப் படத்திற்காக ஒடிஷா, ஆந்திரா பார்டரில், ரெயில்வே டிராக்கில் சீட்டு நுனிக்கு நகர்த்தும் த்ரில்லர் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.
வரும் ஷெட்யூல்கள் கேரளா, மற்றும் பொள்ளாட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் கதை என்னவென்பது கோடி காட்டப்பட்டுள்ளது.கிராமம் ஒன்றில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகைமைதான் மையக்கருவாம். இதில் ஒருகுடும்பத்தின் மூத்த மகன் ரோல் அஜித்திற்கு. பிரதீப் ராவத் வில்லன்.அஜித்திற்கு ஜோடி தமன்னா,. அஜித்தின் தம்பியாக வித்தார்த் நடிக்கிறார். காமெடி ஏரியாவை சந்தானம் கவனித்துக் கொள்கிறாராம்.

வடிவேலு இல்லாத உலகாகி போய் விட்ட தமிழ் திரைப்பட நகைச்சுவை வேடங்களில் சோலாவாக நடித்து வந்த சந்தானம் திடீரென்று கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அதில் ஹீரோவாகவும் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஹீரோ வேடத்தில் நடிக்க முடிவு செய்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் மீண்டும் அவர் ஹீரோ வேடம் ஏற்பதெல்லாம் தெரிந்த விஷயம்தான்.அவரே தயாரிக்கும். இப்படத்தை முதலில் இயக்குனர் கண்ணன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சேட்டை படத்தால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இயக்குனரை மாற்ற முடிவு செய்த சந்தானம் தன்னுடன் படங்களில் இணைந்து நடித்துவந்த ஸ்ரீநாத் என்பவரை இப்படத்தை இயக்க கேட்டுக்கொண்டாராம். இப்படத்துக்காக சென்னை அடுத்த ஸ்ரீபெரும்பதூரில் ரூ. 2 கோடி செலவில் பிரமாண்ட வீடு செட் அமைக்கப்பட்டது. அதில் ஷூட்டிங் தொடங்கியது. பெரும்பகுதி ஷூட்டிங் இங்கு நடப்பதால் பட குழுவினர் அனைவரும் தினமும் வந்து செல்ல முடியாது என்பதால் அப்பகுதியிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அவர்களுடனே சந்தானமும் தங்கி இருக்கிறார் என்பது அடிசினல் தகவல்.

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் அமெரிக்கா, ஆஸ்ட்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லாட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது.மொத்தம் 16 படங்கள் திரையிடப்படுகிறது. குறும்படங்கள், ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன. தினமும் பகல் 12 மணிக்கும் மதியம் 3 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 3 காட்சிகளாக படங்கள் திரையிடப்படுகிறது. 16 படங்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் திரையிடப்படுகிறது. 16 படங்களில் சிறந்த படம் சிறந்த டைரக்டர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. செவன்த் சேனல் கம்யூனிகேஷனும் தமிழ் திரைப்பட அகடமியும் இணைந்து இதை நடத்துகின்றன

கோடங்கி
.