September 20, 2021

“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!?

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிறந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் பொங்கலுக்கு ‘கோச்சடையான்’ வெளியாகுமா என்பதில் பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.இது குறித்து விசாரித்தால் வீரம். ஜில்லா’ போன்ற படங்களுடன் போட்டி போட்டு இறங்கும் தரத்தில் தன மகள் இந்த ‘கோசடையான்’படத்தை உருவாக்கவில்லை என்று ரஜினியே நினைப்பதால் இதை ஓரிரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக் கோலிவுட் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன
nov 25 - cine pongal-
2014ல் பொங்கல் விருந்தாக் தமிழ்த் திரையுலகின் வசூல் மன்னர்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் ரிலீசாக் இருக்கிறதாம். இந்த ரேஸில் முதலில் குதித்தது அஜித்தின் ‘வீரம்’. அதனைத் தொடர்ந்து இணைந்தது விஜய்யின் ‘ஜில்லா’. பின்னர் ரஜினியின் ‘கோச்சடையான்’, படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதையடுத்து ரஜினி படம் வெளியாவதை யொட்டி அஜித், விஜய் படங்கள் தள்ளி வைக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

ஆனால் கோலிவுட்டில் நடந்ததோ யாரும் எதிர்பாராதது. ரஜினியின் . ‘கோச்சடையான்’ பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்த அதே தினத்தன்று மாலையே ‘வீரம்’ படத்தின் தயாரிப்பாளர் “எங்களது படம் கண்டிப்பாகப் பொங்கலுக்கு வெளியாகும்” என்று உரத்த குரலில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ‘ஜில்லா’ தயாரிப்பாளரும் “எங்களது படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக ‘ஜில்லா’ பொங்கல் விருந்து” என்று தெரிவித்தார்.

அதே சமயம் ‘வீரம்’, ‘ஜில்லா’ ஆகிய படங்கள் இப்போது கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கின்றன. மேலும் டிசம்பர் 7ம் தேதி ‘வீரம்’ பாடல்களும், ‘ஜில்லா’ படத்தின் பாடல்கள் டிசம்பர் 15ம் தேதியும் வெளியாகும் என்று செய்திகள் கசிந்துள்ளன.

ஆனால் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் இப்படடத்தின் FIRST COPY தயாராகும் என்பதால் அதற்குப் பிறகு விநியோக உரிமை, திரையரங்கு ஒப்பந்தம் என்பதெல்லாம் சாத்தியமில்லை என்கிறார்கள்.

மொத்தத்தில் ‘வீரம். ஜில்லா’ போன்ற படங்களுடன் போட்டி போட்டு இறங்கும் தரத்தில் தன மகள் இந்த ‘கோசடையான்’படத்தை உருவாக்கவில்லை என்று ரஜினியே நினைப்பதால் இதை ஓரிரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய முடிவேடுத்திருப்பதாக் கோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன .

‘கட்டிங் கண்ணையா’