October 19, 2021

கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல்!- ஜனாதிபதி பிரதமர் பாராட்டு

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கு போராடி வரும் இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.மேலும், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அத்துடன் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் அவர்.

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
nobel-peace
2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல் பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் “பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.

. 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல் பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் “பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கைலாஷ் சத்யார்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.குழந்தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால் பல இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ல மலாலாவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.அதாவது, ஓர் இந்து மற்றும் ஒரு முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினை அளிக்கும்போது கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.