October 25, 2021

கேரளாவில் திருநங்கைகள் ஓட்டும் ஜி-டாக்சி

கேரள அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம், தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் ‘ஜெண்டர் பார்க்’ அமைப்பை உருவாக்கி. அந்த அமைப்பின் மூலம் , பெண் பயணிகளுக்கு, பெண்களால் இயக்கப்படும், ‘ஷி – டாக்சி’ சேவையை துவக்கியது. 24 மணி நேரம், பெண்களால் இயக்கப்படும் டாக்சிகளுக்கு, கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது . இதையடுத்து, பெண் பயணிகளுக்கு பெண் ஓட்டுனர் களை கொண்டு, பஸ் சேவை அளிக்க ‘ஜெண்டர் பார்க்’ திட்டமிட்டு இதற்காக, ‘ஷி – பஸ்’ சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
g-taxi 2
இந்நிலையில் .சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு “ஜி-டாக்சி’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வழக்கம் போல் இந்த டாக்சிக்களை திருநங்கைகளே இயக்குவர். இதன்மூலம் சமுகத்தில் அவர்களு டைய வாழ்வாதாரம் மேம்படும்.கேரள மாநில சமூக நீதித் துறையின் கீழ் செயல்படும் “ஜெண்டர் பார்க்’ எனும் அமைப்பு இந்த டாக்சி சேவையைத் தொடங்க உள்ளது.இதில், அனைத்துத் தரப்பினரும் சேர்ந்த பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .