October 16, 2021

கேன்சரா ? அல்லது ..டயாபட்டீசா ? உங்க மூச்சுக் காற்றை வச்சே கண்டுபிடிக்கும் ஆப் வரப் போவுது !

கடந்த காலங்களில் குணப்படுத்தும் முறைகள் பெரும்பாலும் ஓர் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப் படையில் இருக்கவில்லை, மாறாக மூடநம்பிக்கையும் மத சடங்குகளும் நிறைந்த ஒன்றாகவே இருந்தன. டாக்டர் ஃபிலிக்ஸ் மார்டீ-ஈபான்யெஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்ட தி எபிக் ஆஃப் மெடிசின் என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: “நோயை முறியடிப்பதற்கு . . . , மருந்தும் மதமும் கலந்த ஒரு மருத்துவத்தை மெசொப்பொத்தோமியர் நாடினர், ஏனென்றால் நோய் என்பது தெய்வத்திட மிருந்து வரும் தண்டனை என அவர்கள் நம்பினார்கள்.” அதற்குப் பிறகு வந்த எகிப்திய மருத்துவமும் அதே போல் மதத்தில் வேரூன்றியிருந்தது. இவ்வாறு, ஆரம்ப காலம் முதற்கொண்டே சுகமளிப்பவர் மதரீதியில் ஓர் உயர்ந்த மனிதராக பாராட்டப்பட்டார்.
cencer jan 10
த க்ளே பெடஸ்டல் என்ற நூலில், டாக்டர் தாமஸ் ஏ. ப்ரெஸ்டன் இவ்வாறு கூறுகிறார்: “பூர்வீக மனிதருடைய நம்பிக்கைகள் பல, இன்றுவரை மருத்துவ துறையில் அதன் தடயத்தைப் பதித்திருக் கின்றன. வியாதியை நோயாளியால் கட்டுப்படுத்த முடியாது, மருத்துவருடைய மீமானிட சக்தியால் தான் குணப்படுத்த முடியும் என்பதும் அந்நம்பிக்கைகளில் ஒன்று.”

ஆனால் காலப்போக்கில், மருத்துவத்தை அதிகமதிகமாக அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள். பூர்வகாலத்தில் அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் தலைசிறந்தவர் ஹிப் போகிரேடஸ். இவர் சுமார் பொ.ச.மு. 460-⁠ல், கோஸ் என்ற கிரேக்க தீவில் பிறந்தார். இவர் மேலைநாட்டு மருத்துவத்தின் தந்தை என பலரால் போற்றப்படுகிறார். ஹிப்போகிரேடஸ் மருத்து வத்தை பகுத்தறிவுடன் அணுகுவதற்கு அடித்தளம் போட்டார். வியாதி என்பது தெய்வத்தி டமிருந்து வரும் தண்டனை என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அது இயல்பாகவே வரும் ஒன்று என்பதை நிரூபித்தார். உதாரணமாக, காக்காய்வலிப்பு நோயை கடவுளால் மாத்திரமே குணப்படுத்த முடியும் என்பதால் அது புனித நோய் என நெடுங்காலமாக அழைக்கப்பட்டது. ஆனால் ஹிப்போ கிரேடஸ் இவ்வாறு எழுதினார்: “பிற வியாதிகளைப் போலவே புனித வியாதி என அழைக்கப்படும் வியாதியும் கடவுளிடமிருந்து வருவதாகவோ அல்லது புனிதமானதாகவோ எனக்குத் தோன்றவில்லை, ஆனால் இயல்பாக வரும் ஒன்றே.” பல்வேறு வியாதிகளுக்கு அறிகுறிகளை கண்டறிந்து, பிற்காலத்தில் எடுத்துப் பார்ப்பதற்காக அவற்றை பதிவு செய்து வைத்ததில் ஹிப்போகிரேடஸே முதன்மையானவர்.

நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பொ.ச. 129-⁠ல் பிறந்த கிரேக்க மருத்துவராகிய கேலன் இதே போன்று புதுமையான அறிவியல் ஆராய்ச்சி செய்தார். மனிதர்களையும் விலங்குகளையும் அறுத்துப்பார்த்ததன் அடிப்படையில், உடற்கூறு சம்பந்தமாக கேலன் ஒரு பாடநூலை தயாரித்தார், அதை பல நூற்றாண்டு களாக மருத்துவர்கள் பயன்படுத்தினர்! 1514-⁠ல் ப்ருஸ்ஸெல்ஸில் பிறந்த ஆன்டிரியாஸ் வெசாலியஸ் மனித உடலின் வடிவமைப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை எழுதினார். அப்புத்தகம் எதிர்ப்பை சந்தித்தது, ஏனென்றால் கேலன் சொன்ன பல விஷயங்களுக்கு முரணாக அது இருந்தது. ஆனால் அதுவே நவீன உடற்கூறியலுக்கு அடித்தளமாக விளங்கியது. டீ குரோஸன் (பிரபலமானவர்கள்) என்ற நூல் சொல்கிறபடி, வெசாலியஸ் “இதுவரை வாழ்ந்த மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் ஒருவரானார்.”

இருதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பற்றிய கேலனுடைய கொள்கைகளும் காலப்போக்கில் காலா வதியாகிவிட்டன.* ஆங்கிலேய மருத்துவர் வில்லியம் ஹார்வி மிருகங்களையும் பறவை களையும் அறுத்து ஆய்வு செய்வதில் பல வருடங்களை செலவழித்தார். இருதய வால்வுகள் எப்படி இயங்குகிறது என்பதை கவனித்தார், இருதய வென்ட்ரிக்கிள்கள் ஒவ்வொன்றிலும் உள்ள இரத்தத்தின் அளவை கணக்கிட்டு, உடலிலுள்ள இரத்தத்தின் அளவை மதிப்பிட்டார். விலங்குகளின் இருதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஹார்வி தம்முடைய கண்டுபிடிப்புகளை 1628-⁠ ல் வெளியிட்டார். அவர் கண்டனம் செய்யப்பட்டார், எதிர்க்கப்பட்டார், தாக்கப்பட்டார், அவமதிக் கப்பட்டார். ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் மருத்துவத்தில் ஒரு திருப்புக் கட்டமாக இருந்தன—⁠உடலின் இரத்த ஓட்ட மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது! இந்நிலையில் ஒருவர் வெளியேற்றும் சுவாசக்காற்றை வைத்தே அவருக்கு புற்று மற்றும் நீரிழிவு நோய் தாக்கி யுள்ளதா? என்பதை கண்டு பிடிக்கும் அரியமுயற்சியில் ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

புற்று, நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குள்ளானவர்களின் மூச்சுக் காற்றில் ஒருவித துர்நாற்றம் கலந்திருக்கும். அந்த நாற்றத்தை தரம்பிரிக்கக்கூடிய சக்தி கொண்ட இந்த புதிய மென்பொருள்,ஒருவரின் மூச்சுக்காற்றை வைத்தே அவருக்கு புற்று உள்ளிட்ட நோய்கள் உள் ளதா? என்பதை தெளிவாக கண்டுபிடித்துவிடும். ஜப்பான் அரசின் கூட்டமைப்புடன் அந்நாட்டின் பிரபல ஆய்வு நிறுவனம் மற்றும் ஒசாகா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சமீபத் தில் உருவாக்கியுள்ள இந்த மென்பொருள் புற்று மற்றும் நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும் ஆற்றல் நிறைந்ததாக சோதனைரீதியாக நிரூபணமாகியுள்ளது.

மேற்கண்ட நோய்கள் உள்ளனவா? என்பதை மிக குறைந்த செலவில் இந்த புதிய கருவியின் மூலம் தெரிந்துகொண்டு அடுத்தகட்டமாக சிறப்பு சிகிச்சைகளை எடுத்துகொள்ள இந்த புதிய கருவி உபயோக மாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கு தேவையான நோய்சார்ந்த சுவாசக்காற்றின் துர்நாற்ற வகைகளை தரம்பிரித்து பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. கைபேசி போன்றவற்றில் இந்த புதிய மென்பொருளை இணைத்து விட்டால் விலை குறைவான இந்த புதிய கருவி இன்னும் ஆறாண்டு களுக்குள் வர்த்தகரீதியாக விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.